[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 09 May, 2019 08:59 am
  • அ+ அ-

மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்: விருந்தினர் வருகையால் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

மிதுனம்: தாயாருடன் எதிர்பாராத வகையில் மனத்தாங்கல் வரும். பணவரவு திருப்தி தரும் என்றாலும் அநாவசிய செலவுகள் வந்து போகும். மின்சார சாதனங்கள் திடீரென பழுதாகும்.

கடகம்: சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தொகை தாமதமாக வரும். பயணத்தால் அலைச்சலும், வீண் செலவுகளும் ஏற்படும்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். இழுபறியாக இருந்தவந்த வேலைகள் முடிவடையும்.

கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

துலாம்: தந்தைவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுபகாரியங்களுக்கு தலைமை தாங்குவீர்கள். பண வரவு திருப்தி தரும்.

விருச்சிகம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தந்தைவழி உறவினருடன் கருத்து மோதல், பிரச்சினை வரக்கூடும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடவேண்டாம்.

தனுசு: பழுதாகியிருந்த வாகனம் சரியாகும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

மகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாட்களாக விலகியிருந்த நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். அவர்களால் சில உதவிகள் கிட்டும். தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும்.

மீனம்: ஆன்மிக ஆற்றல் பெறுவீர்கள். கடந்தகால இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான செய்தி தேடிவரும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் மதிப்பார்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close