[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 08 May, 2019 08:58 am
  • அ+ அ-

மேஷம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வீட்டை அலங்கரிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். அவர்களின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி வெளிநபர்களிடம் குறைகூறி பேச வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக்கூடிய சில கருத்துகள்கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது.

கடகம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் கோபப்படுவார்கள். திட்டமிடாத செலவுகளைப் போராடி சமாளிப்பீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும்.

கன்னி: எதிர்ப்பு, இழப்பு, ஏமாற்றம் யாவும் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். திடீர் பயணம் உண்டு.

துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி, கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: புது எண்ணங்கள் தோன்றும். பணவரவு திருப்தி தரும் கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பால்ய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மனநிறைவு கிட்டும்.

மகரம்: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து வரும் பணத்தால் சமாளிப்பீர்கள். பேச்சுத் திறமையால் சில காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

கும்பம்: பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

மீனம்: சகோதரர் வகையில் ஒற்றுமை ஏற்படும். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் நிலவிய கூச்சல், குழப்பம் யாவும் நீங்கும்.  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close