[X] Close

உப்பு,சர்க்கரை, அரிசி, ஆடை, விசிறி, குடை தானம் செய்யுங்கள்;ஐஸ்வர்யமான வாழ்க்கை நிச்சயம்!


  • kamadenu
  • Posted: 07 May, 2019 11:06 am
  • அ+ அ-

-வி.ராம்ஜி

உப்பு,சர்க்கரை, அரிசி, ஆடை, விசிறி, குடை தானம் செய்யுங்கள்; ஐஸ்வர்யமான வாழ்க்கை உங்களுக்கு நிச்சயம் என்பது உறுதி.

ஐஸ்வர்யமான வாழ்க்கை நிச்சயம்!அட்சய திருதியை நன்னாளில், அந்தப் புண்ணிய தினத்தை வலியுறுத்தும் விதமாக, ஏராளமான புராண, சரித்திரச் சம்பவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.   

 மஹோதயம் எனும் நகரில் ஒரு வணிகன் இருந்தான். அவன்  குணாளன். மிகவும் நல்லவன். தெய்வ பக்தி நிறைந்தவன்.

அட்சய திருதியையின் மகிமையைக் கேள்வியுற்று, ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் கங்கையில் நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்வதுடன், கோ தானம், சொர்ண தானம், பூமி தானம் முதலானவற்றைச் செய்து வழிபட்டான்!

  இதன் பயனால் அவன் மறுபிறவியில் குசாவதி என்ற நாட்டின் மன்னனாகப் பிறந்தான். அட்சயமான செல்வத்தைப் பெற்றான் என்கிறது சரிதம். எனவே, இந்த தினத்தில் கங்கா ஸ்நானம், பித்ரு தர்ப்பணம் இவற்றுடன்  தங்கம்,  விசிறி, குடை ஆகியவற்றை தானம் செய்தால், அழியாத பலன்களையும் புண்ணியங்களையும் அடையலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

  அட்சய திருதியை அன்று சிலர் தங்கள் இல்லங்களில் மகாவிஷ்ணுவை நினைத்து பூஜை செய்வார்கள். அதாவது, ஒரு படியில் அரிசி நிரப்பி அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு, புதிய வஸ்திரம் சுற்றி அலங்கரித்து, உச்சியில் தங்கக் காசு ஒன்றை வைத்து, மலர்களால் அர்ச்சித்து பூஜிப்பார்கள். இதனால், இல்லத்தில் அந்த ஆண்டு முழுவதும் எந்த விதக் குறையுமின்றி தங்கம் கொழிக்கும் என்பது ஐதீகம்.

  அட்சய திருதியை நாளில், வாங்குவதால் ஒன்றுமில்லை. கொடுப்பதால்தான் கொடுக்க கொடுக்கதான், கிடைத்துக் கொண்டே இருக்கும். எனவே அட்சய திருதியை நாளில், நகைக்கடைகளில் நிற்காமல், வெண்மை நிறப் பொருட்களையும் அதாவது பால், வெண்ணெய், உப்பு, சர்க்கரை, அரிசி முதலானவற்றையும் வஸ்திரம், குடை, விசிறி என முடிந்தவரை தானம் செய்யுங்கள்! வீட்டில் ஐஸ்வர்ய லட்சுமி குடியேறுவாள். சுபிட்சம் நிலவும்!

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close