[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 07 May, 2019 08:56 am
  • அ+ அ-

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தந்தையாரின் உடல்நலம் சீராகும். எதிர்பாராத பயணம் உண்டு.

ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் வீண் விவாதங்கள் வந்து போகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். வாகனத்தில் அதிக வேகமாகச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

கடகம்: பணப்பற்றாக்குறை நீங்கும். குடும்பத்தினர் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.

சிம்மம்: நீண்ட நாட்களாகத் தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். உங்களின் முயற்சிக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

கன்னி: புண்ணியத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். தடைபட்ட காரியங்களை சாதுர்யமாக முடிப்பீர்கள். வாகனச்செலவுகள் நீங்கும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

துலாம்: வேலைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும்.

விருச்சிகம்: எதிர்பாராத சந்திப்பு நிகழும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயார் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்.

தனுசு: குடும்பத்தினரிடையே ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி செலவு வைத்துக் கொண்டிருந்த வாகனம் இனி சீராகும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணவரவு உண்டு.

மீனம்: உங்களின் வெளிப்படையான, எதார்த்தமான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close