[X] Close

இந்த அட்சய திருதியை தங்கம் வாங்க ஏற்றதல்ல!


  • kamadenu
  • Posted: 06 May, 2019 14:31 pm
  • அ+ அ-

- ஜோதிடர் ஜெயம் சரவணன்

அட்சய திருதியை நாளில், தங்கம் வாங்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. மேலும் அட்சய திருதியையில் தங்கம் வாங்கும் நாள் என்பது 12 ஆண்டுக்கு ஒருமுறையே வரும்.

சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை திதி அட்சயதிருதியை எனப் போற்றப்படுகிறது. அன்றைய நாளில் சூரியன் உச்சம், சந்திரன் உச்சம், சுக்கிரன் உச்சம், எல்லாவற்றுக்கும் மேலாக தங்கத்திற்கு அதிபதியான குரு உச்சமாக இருக்கவேண்டும் அதுவே உண்மையான அட்சயதிருதியை என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இப்படியான அமைவில் இருக்கும் போது வாங்கப்படும் எந்தவொரு பொருளுக்கும் மதிப்பு, மரியாதை உண்டு. வளர்ச்சி நிச்சயம்.  

ஆனால் தற்போது வரும் நாளைய தினம் 7.5.19 அட்சயதிருதியை தங்கம் வாங்குவதற்கு ஏற்றதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும், காரணம்? குரு தற்போது வக்ர கதியில் இருக்கிறார், தங்கத்திற்கு அதிபதி வக்ர கதியில்.... அதாவது தன் இயல்பு நிலைக்கு எதிராக இருக்கும் போது தங்கம் வாங்குவது எந்த வகையிலும் மதிப்பில்லை; வளர்ச்சி தராது.

அட்சயதிருதியை என்பது புண்ணிய காரியங்கள் செய்து அதன் மூலம் கிடைக்கும் புண்ணியங்க உங்கள் சந்ததியினருக்கு சேரும் என்பது உறுதி. அதாவது இந்தப் புண்ணியத்தின் பலன்கள் என்பது நாம் நம் சந்ததிக்கு வைத்துச் செல்லும் பிக்ஸட் டெபாசிட் மாதிரி! அதன் மூலம் உங்கள் சந்ததி வாழ்வாங்கு வாழ்வார்கள்.

தங்கம் வாங்கும் அட்சயதிருதியை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும். இது கடந்த 2015ம் ஆண்டு வந்தது, அந்த ஆண்டு குரு பகவான் உச்சம், இனி 2027ல் தான் தங்கம் வாங்கும் திருதியை வரும்.

சரி, அப்படியானால் இந்த ஆண்டு என்ன செய்யலாம்?

சித்தர்கள் ஜீவசமாதி உள்ள ஆலயங்கள், உதாரணமாக திருவண்ணாமலை போன்ற ஆலயங்களுக்குச் செல்வது புண்ணியத்தை தரும்,

வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கலாம். குறிப்பாக, மின் சாதனங்கள், சிறுசிறு உபகரணங்கள் வாங்கலாம். புத்தாடைகள் வாங்கலாம்.

அன்னதானம் செய்யலாம். ஆலயங்களுக்கு உங்கள் சார்பில் ஏதாவதொரு பூஜைக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கித்தரலாம். இப்படி ஏதாவதொரு நல்ல காரியங்கள் செய்து புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்வோம்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close