[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 05 May, 2019 09:21 am
  • அ+ அ-

மேஷம்: முக்கிய அலுவல்களை நீங்களே செய்து முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பணவரவு உண்டு.

ரிஷபம்: உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். செய்நன்றி மறந்த மனிதர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து அவ்வப்போது மகிழ்வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

கடகம்: உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். பண வரவு அதிகரிக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் வரும். மற்றவர்களுக்காகச் சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். நேர்மறை எண்ணம் பிறக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

கன்னி: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் குறைகூறி கொண்டிருக்காதீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

துலாம்: சகோதரர்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

விருச்சிகம்: திடீர் பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்டநாள் பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

மகரம்: வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

கும்பம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். திடீர் பயணம் உண்டு.

மீனம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அழகு, இளமை கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close