[X] Close

நல்லதே நடக்கும் - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 04 May, 2019 09:25 am
  • அ+ அ-

மேஷம்: கடந்தகால சம்பவங்களை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். திட்டமிடாதச் செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். சகோதரர் வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

மிதுனம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் இயன்றதை செய்து கொடுப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

சிம்மம்: எடுத்த காரியங்களை முடிக்க முடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும். தந்தையின் உடல்நிலை சீராகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

கன்னி: உங்களின் முன்கோபத்தால் பகை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சிறுசிறு அவமானம், ஏமாற்றம் ஏற்படக்கூடும்.

துலாம்: மனதில் பட்டதைப் பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய மனக்கசப்பு நீங்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். திடீர் பயணம் உண்டு.

தனுசு: துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

மகரம்: பிள்ளைகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்விர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கும்பம்: அதிரடியாக திட்டங்களைத் தீட்டுவீர்கள். உங்களைத் தேடி வந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

மீனம்: குடும்பத்தில் அமைதி, நிம்மதி உண்டாகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close