[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 03 May, 2019 08:48 am
  • அ+ அ-

மேஷம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு உண்டு. புதிய டிவி, மிக்ஸி உள்ளிட்ட மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சுபச்செலவுகளும் அதிகரிக்கும். பால்ய நண்பர் சந்திப்பார்.

ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பனிப்போர் மறையும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்.

மிதுனம்: இழுபறியாக இருந்த வேலைகள் திடீரென முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

கடகம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள்.

சிம்மம்: வேலைச்சுமை, பதற்றம், நண்பர்களுடன் கருத்துவேறுபாடு வரக்கூடும். அரசு விவகாரங்களில் அவசரம் வேண்டாம். சொந்தபந்தங்களின் அன்புத்தொல்லை அதிகமாகும்.

கன்னி: குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

துலாம்: தன்னம்பிக்கை துளிர்விடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகளின் தவறைச் சுட்டிக்காட்டி திருத்துவீர்கள். திடீர் பயணம் உண்டு.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் பெருமையடைவீர்கள்.

தனுசு: விலகியிருந்த பழைய உறவினர்கள் தேடிவந்து பேசுவார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாயாருடன் எதிர்பாராத கருத்துமோதல்கள் வரும்.

மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பணத் தட்டுப்பாட்டை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

கும்பம்: உங்கள் செயலில் புத்திசாலித்தனம் வெளிப்படும். பழைய பிரச்சினைகளை சுமுகமாகப் பேசி முடிப்பீர்கள். விருந்தினர், நண்பர்களின் திடீர் வருகையால் வீடு களைகட்டும்.

மீனம்: புதியவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லை அதிகரிக்கும். கலைப்பொருட்கள் சேரும். 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close