[X] Close

வார ராசிபலன் மே 02 முதல் மே 08 வரை மேஷம் முதல் கன்னி வரை)


02-08

  • kamadenu
  • Posted: 02 May, 2019 13:00 pm
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் எந்த ஒரு விஷயத்திலும் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பணவரவு திருப்தி தரும். தொழில், வியாபாரத்தில்  இழுபறியான நிலை காணப்படும். குடும்பத்தினரிடம் தன்மையாகப் பேச வேண்டும்.

தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் ஆலோசித்துச்  செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். குழந்தைகளிடம் நிதானமாகப் பேசி எதையும் புரியவைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவீர்கள். 

பெண்களுக்கு, அடுத்தவர் பேச்சைக் கேட்டுக் குழம்ப வேண்டாம். கலைத் துறையினருக்கு, பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகள் கொடுத்த  வாக்கைக் காப்பாற்ற முடியும். மாணவர்களுக்கு, கல்வியைப் பற்றிய பயம் நீங்கும். தெளிவான உள்ளத்துடன் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி. 

திசைகள்: கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு. 

எண்கள்: 1, 3.

பரிகாரம்: அம்மனுக்கு அர்ச்சனை செய்து  வணங்கி வழிபட மனக்கவலை தீரும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தாலும் தனாதிபதி புதன் சஞ்சாரத்தாலும் பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.  உத்தியோகத்தில் வீண் அலைச்சலைச் சந்திப்பார்கள். குடும்பத்தில் தாய்வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். நல்லது  கெட்டது அறிந்து செயல்படுவீர்கள். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு, எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கலைத்  துறையினர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.

அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு, படிப்பது மகிழ்ச்சியை உண்டாக்கும் அனுபவமாக  இருக்கும். அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.

திசைகள்: தென்மேற்கு, தெற்கு.

நிறங்கள்: வெள்ளை.

எண்கள்: 3, 6.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று நவக்கிரகத்தில்  சுக்கிரனுக்குத் தீபம் ஏற்றி பூஜை செய்தால் பணவரவு கூடும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியிலேயே செவ்வாய், ராகு இருப்பதால் புகழ், கௌரவம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் முயற்சி தேவைப்படும். பயணங்கள் செல்ல  நேரிடலாம். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்குள் மனவருத்தம் குறையும்.

பிள்ளைகளின் மீது கவனம் தேவை.  வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு, உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும்.  கலைத் துறையினருக்கு, எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும்.

அரசியல்வாதிகளுக்கு, செயல்திறன் கூடும். மாணவர்களுக்கு, பாடங்களை மனநிறைவுடன்  படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்.

திசைகள்: மேற்கு, தென்மேற்கு.

நிறங்கள்: பச்சை, மஞ்சள்.

எண்கள்: 2, 3, 5.

பரிகாரம்: சனிக்கிழமையன்று விஷ்ணு  சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்கப் பிரச்சினைகள் தீரும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் மனத்தில் தெளிவு உண்டாகும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில், வியாபாரப் பயணங்கள் இருக்கும். வியாபாரச் செலவுகள் அதிகரிக்கும்.  உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து  நடந்துகொள்வது அமைதியைத் தரும்.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும்.  பெண்களுக்கு, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். 

அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு, மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். விளையாட்டுகளில் கவனம்  செலுத்துவதோடு கல்வியிலும் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்.

திசைகள்: வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெள்ளை.

எண்கள்: 2, 6.

பரிகாரம்: சரஸ்வதியை பூஜித்து வர, காரியங்களில்  வெற்றி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியனின் உச்ச சஞ்சாரத்தால் கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் சந்தோஷம் உண்டாகும்.  வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களைத் தக்கவைத்துக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். திட்டமிட்டுச்  செயலாற்றுவதால் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் உதவி  தாமதமாகவே கிடைக்கும்.

 பெண்களுக்கு, பணவரவு அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, திட்டமிட்டுச் செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.  அரசியல்வாதிகளுக்கு, மனக்குழப்பம் அகலும். மாணவர்களுக்கு, உயர்கல்வித் திட்டங்கள் உருவாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன். 

திசைகள்: கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், நீலம்.

எண்கள்: 1, 3, 9.

பரிகாரம்:  ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வணங்க மனத்தில் தைரியம் பிறக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் வாகனங்களால் செலவு உண்டாகும். மனத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும்.  தொழில், வியாபாரத்தில் அனைத்தையும் சாதகமாக்க செயல்படுவீர்கள்.

புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் சொல்படி நடப்பது  நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயல்வார்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை உங்களுக்குப் பல விதத்திலும் உதவுவார். 

அனுபவப்பூர்வமான அறிவுத் திறன் பயன்படும். பெண்களுக்கு, மகிழ்ச்சி உண்டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். கலைத் துறையினருக்கு, ஆரோக்கியத்தில் கவனம்  தேவை. அரசியல்வாதிகளுக்கு, செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு, பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்.

திசைகள்: தெற்கு, தென்மேற்கு.

நிறங்கள்: பச்சை, சிவப்பு.

எண்கள்: 3, 5, 9.

பரிகாரம்: நரசிம்மரை வணங்க  தைரியம் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close