[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 30 Apr, 2019 08:46 am
  • அ+ அ-

மேஷம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பெரிய பதவிகள் தேடி வரும். திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. மின்சாதனங்கள் திடீரென பழுதாகும்.

சிம்மம்: திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி கலகலப்பான சூழல் ஏற்படும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மனைவிவழியில் உதவியுண்டு.

கன்னி: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். சமூகத்தில் பிரபலமானவர்களின் உதவியால் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.

துலாம்: உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபகாரியங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள்-. கலை, இசை போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்: நெடுநாட்களாகத் திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த நகைகள், துணிமணிகள் வாங்குவீர்கள்.

தனுசு: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும்.

மகரம்: பணவரவு அதிகரிக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கூடா பழக்கவழக்கங்களில் இருந்து பிள்ளைகள் விடுபடுவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கும்பம்: வீண் பகை, விரயச் செலவு, முன்கோபம், திடீர் பயணம் ஏற்படும். அரசாங்க அதிகாரிகளை அநாவசியமாகப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனச் செலவு அதிகரிக்கும்.

மீனம்: வேலைகளை உடனே முடிக்க நினைப்பீர்கள். பிள்ளைகளால் வீண் அலைச்சல் உண்டு. அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகளால் எரிச்சல் அடைவீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close