[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 28 Apr, 2019 08:42 am
  • அ+ அ-

மேஷம்: எதிரிகளை வீழ்த்துவீர்கள். வழக்குகள் சாதகமாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெற்றோர் உடல்நலம் சீராகும். எக்காரியத்திலும் நிதானம் தேவை.

ரிஷபம்: வீடு, மனை வாங்கும் முயற்சிகள் கைகூடும். வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள்.

மிதுனம்: பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணத்தால் அலைச்சல், செலவுகள் உண்டாகும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

கடகம்: தேவையற்ற குழப்பங்கள் நீங்கி, மனத்தெளிவு உண் டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேருவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

சிம்மம்: பணவரவு, பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். போட்டிகள், விவாதங்களில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். அதிகாரிகள், விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி: வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக நடக்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.

துலாம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அனைவரும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.

தனுசு: வீடு கட்டும் பணி நல்லபடியாக முடியும். நவரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

மகரம்: உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. நடந்து முடிந்த சம்பவங்கள், பிரச்சினைகள் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டாம். எதிலும் நிதானம் அவசியம்.

கும்பம்: திடீர் பயணங்கள், அலைச்சல், அசதி, தூக்கமின்மை, வீண் செலவுகள் வந்துபோகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். பொருள் வரவு உண்டு.

மீனம்: உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு. மனைவி வழியில் உதவி கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் உங்களை புரிந்துகொள்வார்கள்.
 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close