[X] Close

வார ராசிபலன் ஏப்ரல் 25 முதல் மே 01 வரை மேஷம் முதல் கன்னி வரை)


25-01

  • kamadenu
  • Posted: 25 Apr, 2019 14:05 pm
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் சின்ன விஷயத்துக்குக்கூட  கோபம் வரலாம். நிதானம் தேவை. வேற்றுமொழி பேசுபவர்களால்  நன்மை உண்டாகும். புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும்.

நீங்கள் நினைத்தபடி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் கோபம்ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்கள்முன்னேற்றத்துக்கு உதவும்.  முக்கியமானவர்களின் சந்திப்பு கிட்டும்.நண்பர்கள், உறவினர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

தொழிலில் வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாகப்பேசுவதனால் வியாபாரம் வளர்ச்சி பெறும். உடன் பணிபுரிபவர்கள்ஒத்துழைப்பால் வேலைச் சுமையைச் சுலபமாகச் சமாளிப்பீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். 

பெண்களுக்கு,அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை.அரசியல்வாதிகள், எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு  கல்வியில் திருப்தியான நிலைகாணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், இளம்பச்சை

எண்கள்: 4, 7

பரிகாரம்: குலதெய்வத்தைப் பூஜை செய்து வணங்க அனைத்தும் வெற்றியாக முடியும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் பல வழிகளிலும் பணவரவு இருக்கும்.காரியத்தடைகள்நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் கொண்டு உதவிகள் செய்வீர்கள்.பெரியோர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும்புள்ளிகளின்அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில்  இருப்பவர்களுடன் கோபமாகப்பேசும் சூழ்நிலை ஏற்படும்.

மனைவி, குழந்தைகளின் உடல் நலத்தில்கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில்செல்லும் போது கவனம் தேவை. வயிற்று நோய் வந்து நீங்கும். தொழில்,வியாபாரத்தில் மந்தநிலை மாறும். புதிய வர்த்தக ஆர்டர்களைப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள்கிடைக்கலாம்.  வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். கலைத் துறையினர் தவறான முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். பெண்களுக்குஅறிவுத்திறமை அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளுக்கு, இனிமையானபேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு,சந்தேகங்களை உடனுக்குடன் போக்க ஆசிரியர்களின் உதவிகிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன் , வெள்ளி

திசைகள்: வடமேற்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு

எண்கள்: 1, 5

பரிகாரம்: விநாயகப் பெருமாளைதீபம் ஏற்றி வழிபட காரியத் தடைகள் நீங்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சினைகள்தீரும். யோகங்கள் ஏற்படும் வாரம் இது.  ஆரோக்கியம் மேம்படும்.மனக்குழப்பம் நீங்கும். பிறருடன் பழகும்போது நிதானம் தேவை.குடும்பத்தில்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

எச்சரிக்கை தேவை.உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் தனிப்பட்ட விஷயங்களைப் பேச வேண்டாம். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்ல வேண்டும். வாகனத்தை  ஓட்டும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில்எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவு அதிகரிக்கும். 

புதிய வர்த்தகஆர்டர்கள் பெற கூடுதல் முயற்சி தேவைப்படும். உத்தியோகத்தில் வீண்அலைச்சல் வேலைப் பளு இருக்கும். கலைத் துறையினர் தூங்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்தகாரியங்கள் முடிவுக்குவரும். அரசியல்வாதிகளுக்கு, புதிய தொடர்புகளால்லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம்.மாணவர்களுக்கு, கல்விக்கான செலவு உண்டாகும். திறமைவெளிப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், சனி

நிறங்கள்: வெள்ளை, பிரவுன்

எண்கள்: 5, 7

பரிகாரம்: சிவன் கோயிலுக்குச்  சென்று சிவன்,அம்பாளை நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் முயற்சிக்குப் பிறகு எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.வீண் வழக்குகள் வரலாம். உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம்.அலைச்சலைச் சந்திக்க நேரிடும்.  பயணங்கள் இருக்கும்.எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை.

குடும்பத்தில்இருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண்விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில்ஆர்வம் காட்டுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் குறிப்பாக கூட்டுத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.

வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது வியாபார மேன்மைக்குஉதவும்.  உத்தியோகத்தில் எளிதாகப் பணிகளைச் செய்து முடிப்பார்கள்.செயல்திறன் அதிகரிக்கும். கலைத் துறையினர் பெண்களுக்கு உடல்சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும்.

அரசியல்வாதிகளுக்குமதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்களுக்கு மந்தநிலையைப் போக்கிக் கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 1, 3

பரிகாரம்: திருவாசகம் படித்து வரஎல்லா பிரச்சினைகளும் தீரும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு கூடும். வாக்குவன்மையால் லாபம் உண்டாகும்.வீண் பயணங்களும் அலைச்சலும் இருக்கும். இடமாற்றம் ஏற்படலாம்.கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்துநீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில்கணவன் மனைவி இருவரும் மனம்விட்டுப் பேசுவது நல்லது. குடும்பவிஷயங்களை அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். அடுத்தவர்களின் ஆலோசனைகளை ஏற்கும்போது கவனம் தேவை.உத்தியோகத்தில் அலைச்சலைச் சந்திக்க வேண்டியிருக்கும். 

எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். கலைத் துறையினருக்கு எதிர்பாராத லாபம் இருக்கும்.பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவுஉண்டாகும்.

அரசியலவாதிகளுக்கு முக்கியப் பொறுப்புகள்கிடைக்கக்கூடும். முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும்.மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.மனமகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: தினமும் கந்த சஷ்டிகவசம் சொல்லி முருகனை வழிபடுவதால் துணிச்சல் உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா வசதிகளும் உண்டாகும். நோய்நீங்கி ஆரோக்கியம்பெறுவீர்கள். தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். தாயின் உடல்ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம்.வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

குடும்பத்தில் கணவன்மனைவிக்குள் திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். ஒற்றுமைஅதிகரிக்கும். ஒரு குறிக்கோளுக்காகப் புண்ணிய பயணம் செய்வீர்கள். ஆடம்பரப் பொருட்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்களைவாங்குவதால் செலவு உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் உதவிகள்கிடைக்கும். வாடிக்கையாளர் தேவையறிந்து பொருட்களை  அனுப்பிநன்மதிப்பைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு முயற்சிகள் சாதகமாகும். பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன்புதிட்டமிட்டு செயல்பட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு பணவரவுதாமதப்படும்.

மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும்முயற்சிகளில் பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, ஊதா

எண்கள்: 4, 7 

பரிகாரம்: துர்க்கை அம்மனைஅர்ச்சனை செய்து வழிபட  எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close