[X] Close

வார ராசிபலன் ஏப்ரல் 25 முதல் மே 01 வரை மேஷம் முதல் மீனம் வரை)


25-01

  • kamadenu
  • Posted: 25 Apr, 2019 12:42 pm
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும்.உடனிருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிலும் அவசரமானமுடிவைத் தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் கிடைக்கும். வெளியூர்ப் பயணம்செல்ல நேரிடலாம் . நிலத்தால் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மைஉண்டாகும்.

வாழ்க்கைத் துணைக்குத் தேவையான வசதிகளைச் செய்துதருவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.தொழில், வியாபாரத்தில்  மந்தநிலை மாறும். புதிய வர்த்தக ஆர்டர்கள்வருவதில் தடைகள் விலகும். தேவையான பணவசதி கிடைக்கும்.வெளியூர்ப் பயணம் சிறப்பான எதிர்காலத்துக்கு வித்திடலாம்.

கலைத் துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். பெண்களுக்குஎல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மரியாதைகூடும். மாணவர்களுக்கு,  உற்சாகம் ஏற்படும். எதிர்பார்த்தபடிமேல்படிப்புக்கான சூழல்கள் உருவாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வெள்ளி, சனி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: கருஞ்சிவப்பு, ஊதா

எண்கள்: 5, 8, 9 

பரிகாரம்: பிரதோஷகாலத்தில் சிவனை வணங்குவதால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம்காட்டுவீர்கள். சகோதரர் வழியில்  நன்மை உண்டாகும். எதையும்தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வீடு தொடர்பான வேலைகள்விரைந்து நடக்கும். அதேவேளையில் நெருக்கடியான  சூழலில்எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும்.

 எந்தவொரு விஷயத்திலும்ஈடுபடும் முன்னர் தயக்கம் ஏற்பட்டுப் பின்னர் தெளிவீர்கள். கணவன்மனைவிக்குள் மனம்விட்டுப் பேசித் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். வியாபார விவகாரங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். முன்னேற்றப் பாதையில்சில தடைகளைச் சந்திக்க நேரிடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள்சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்குப் பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்கலாம். கலைத் துறையினருக்கு வேலைகள் தாமதமாகும்.

பெண்களுக்கு, கடன் பிரச்சினைகள் குறையும்.அரசியல்வாதிகளுக்கு புதிய எண்ணங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு, ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எதிலும் ஈடுபட வேண்டும்.

அதிர்ஷடக் கிழமைகள்: செவ்வாய், புதன்

திசைகள்: மேற்கு, தெற்கு

நிறங்கள்: நீலம், பச்சை

எண்கள்: 4, 7, 9

பரிகாரம்:  நவகிரகங்களைவணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது அமைதியைத் தரும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும்.விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். புதிய தொடர்புகள்ஏற்படும். மனம்மகிழும் சம்பவங்கள் நடக்கும். பயணங்கள் செல்லநேரிடும்.  குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறைகாட்டுவீர்கள்.  துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

தேவையானசரக்குகள் கையிருப்பில் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பானபயணங்கள் இருக்கும். கலைத் துறையினருக்கு மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வரும். பெண்களுக்கு, யோசனைகளும் சஞ்சலங்களும் இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு, எந்தக் காரியத்திலும் முடிவு எடுக்கும்  முன்பு தீரஆலோசிப்பது நல்லது. மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெற எல்லாமுயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும்இருக்கும்.

அதிர்ஷடக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு

எண்கள்: 4, 7

பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.பணவரவு தாமதப்பட்டாலும் கையிருப்பு உதவும். வேளைதவறிச் சாப்பிட வேண்டியிருக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்ல வேண்டும். மற்றவர்களுக்கு உதவும்போது கவனமாக இருத்தல் அவசியம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள்நடக்கும். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காகப்பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும்கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது கவனம்தேவை. தொழிலில் போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால்திருப்தி ஏற்படும். 

கடன் தொல்லைகள் குறையும். உத்தியோகத்தில்நன்மை தீமையை யோசிக்காமல்   கொடுக்கப்பட்ட பணியை திறம்படசெய்வார்கள். கலைத் துறையினருக்கு சுபச்செலவுகள் இருக்கும்.பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும்.அரசியல்வாதிகளின் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்குமேற்கல்வியைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷடக் கிழமைகள்: ஞாயிறு, சனி

திசைகள்: மேற்கு, தெற்கு

நிறங்கள்: ஊதா, வயலட்

எண்கள்: 4, 8

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ரநாமம்பாராயணம் செய்து வர எதிர்ப்புகள் அகலும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் முடிவுகள் நல்ல பலனைத் தரும். பிரமுகர்களின்அறிமுகம், உதவி கிடைக்கலாம். பகைகள் விலகும். குடும்பத்தில்மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும்.

சுபகாரியம் நடப்பதற்கான சூழல் உருவாகும். திருமண முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.கணவன் மனைவிக்குள் சந்தோஷம் நிலவும். உறவினர்கள், நண்பர்கள்ஆதரவு கிடைக்கும்.

நெடுநாளைய சங்கடம் தீரும். தொழில்,வியாபாரத்தில் எண்ணியதைச் செய்து முடிப்பீர்கள். வருவாய்அதிகரித்து மனதிற்கு நிம்மதி கிட்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வைஇப்போது எதிர்பார்க்கலாம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலைத் துறையினருக்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்னர் ஆலோசனை கேட்பது அவசியமாகும்.

பெண்களுக்கு மனச்சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும்.  அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும்.மாணவர்கள் திறமையாகச் செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்கப்பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், சனி

திசைகள்: தென்மேற்கு, வடக்கு

நிறங்கள்: நீலம், பச்சை

எண்கள்: 4, 9

பரிகாரம்:  விரதம் இருந்துநவக்கிரகத்தில் சுக்கிர பகவானுக்குத் தீபமேற்றி வழிபட எல்லாநன்மைகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நன்மை தரும்.முக்கியஸ்தர்களின் அறிமுகம்  கிடைப்பதுடன் அவர்களால் உதவியும்கிடைக்கும். வெளியூர்ப் பயணம் இருக்கும். குடும்பத்தில் விருந்தினர்வருகையால் திடீர்ச் செலவுகள் ஏற்படலாம்.

சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்வீர்கள். வெளிவட்டாரபழக்கவழக்கங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். ஆயுதம்,நெருப்பைக் கையாள்தல், வாகனப் பயணங்களில் செல்லும்போதுகவனம் தேவை.  தொழில், வியாபாரத்தில் ஊழியர்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும்.

சக ஊழியர்களின்தவறுக்கு நீங்கள் பொறுப்பாகக் கூடும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றும்முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு தந்தைவழியில் உதவிகள் இருக்கும். மாணவர்களுக்கு வீண் விவாதங்களை தவிர்த்துகூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷடக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு

எண்கள்: 7, 9

பரிகாரம்: ஸ்ரீரங்கம்ரங்கநாதரை வணங்குவதால் சுபிட்சம் உண்டாகும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close