[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கு உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 09:24 am
  • அ+ அ-

மேஷம்: பழைய கசப்பான சம்பவங்கள் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். உங்கள் அனுபவ அறிவைப் பயன்படுத்தி, சில சிக்கல்களுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள்.
**
ரிஷபம்: உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த மனக் கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய நபர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.
**
மிதுனம்: வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும்.
**
கடகம்: விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவார்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். குலதெய்வம் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.
**
சிம்மம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். குழப்பமான விஷயங்களில் தெளிவு பிறக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வீடு வாங்குவது நல்லபடியாக முடியும்.
**
கன்னி: திடீர் திருப்பங்கள் உண்டாகும். முக்கியஸ்தர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
**
துலாம்: பண வரவு, பொருள் வரவு உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணியில் இருந்த தேக்க நிலை மாறும்.
**
விருச்சிகம்: கோபத்தை கட்டுப்படுத்துங்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு காரியங்கள் சற்று தாமதமாகும். சிபாரிசு செய்வது, சாட்சிக் கையெழுத்து போடுவது வேண்டாம். 
**
தனுசு: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துபோகும். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை.
**
மகரம்: புகழ், கவுரவம் உயரும். புது வேலை அமையும். அரசு, பங்குச் சந்தை வகையில் ஆதாயம் உண்டாகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
**
கும்பம்: புதிய பொறுப்பு, பதவிகள் தேடிவரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கைகூடும். தந்தைவழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். ஆன்மிக நாட்டம் கூடும்.
**
மீனம்: உங்கள் நிர்வாகத் திறன் உயரும். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடாமல் உடனடியாக எடுப்பீர்கள். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close