[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 09:33 am
  • அ+ அ-

மேஷம்: இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கிவர வாய்ப்பிருக்கிறது.

ரிஷபம்: போட்டி, சவால்களில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். திருமணம் கைகூடி வரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மிதுனம்: கடந்தகால இனிமையான நிகழ்வுகளை அவ்வப்போது நினைத்துப் பார்த்து மகிழ்வீர்கள். தாயாருடன் கருத்துமோதல் வரும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை.

கடகம்: பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும். வேற்றுமொழி பேசுபவர்களின் அறிமுகம் ஆதரவாக இருக்கும். புதிய நண்பர்களின் உதவியால் சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம்: பணத்தட்டுப்பாடு குறைந்து தேவையான அளவுக்கு பணம் வரும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். விலகியிருந்த உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள்.

கன்னி: மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். காய், கனிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். திடீர் பயணம் உண்டு.

துலாம்: தவிர்க்க முடியாத செலவுகளால் மற்றவர்களிடம் கடன்வாங்கும் சூழல் ஏற்படும். சகோதரர் வகையில் அன்புத் தொல்லை அதிகமாகும். அரசு காரியங்கள் இழுபறியாகும்.

விருச்சிகம்: எதிர்பாராத இடத்தில் இருந்து தக்கசமயத்தில் பணம் வரும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். விருந்தினர் வருகை உண்டு.

தனுசு: சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். உறவினர் வீட்டு திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்ற சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மகரம்: தன்னம்பிக்கை பெருகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். யோகா, தியானம் என மனதை நிலைப்படுத்துவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கும்பம்: இரவுப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்களின் பலம், பலவீனத்தை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது.

மீனம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close