[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 09:05 am
  • அ+ அ-

மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும்.

மிதுனம்: பிரச்சினைகளைத் தீர்க்க புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

சிம்மம்: மனைவிவழியில் மதிப்பு கூடும். அழகு, இளமை மிளர புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

கன்னி: பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும்.

துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். லேசாகத் தலை வலிக்கும். பண விஷயத்தில் கொஞ்சம் கறாராக இருங்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்டநாட்களாகப் பார்க்க நினைத்த ஒருவரை எதிர்பாராமல் சந்திப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். குடும்ப விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காகச் சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். சுபச்செலவு உண்டு.

கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது.. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

மீனம்: சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். புது நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். காரியங்களை திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close