[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 09:06 am
  • அ+ அ-

மேஷம்: மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அவர்களை இசை, நடனம் இவற்றில் பயிற்சி பெற செய்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்த வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டினரால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்: துரோகிகளை இனம்கண்டு அவர்களை ஒதுக்குவீர்கள். உங்களின் தன்னடக்கத்தை அனைவரும் பாராட்டுவார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்: சமூகத்தில் பிரபலமாக இருப்பவருடன் எதிர்பாராத அறிமுகம் கிடைக்கும். அவர்களால் சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள். வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்: மன உளைச்சல், டென்ஷன், சோர்வு, விரக்தி வந்துபோகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள்.

கன்னி: யாரையும் யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

துலாம்: புதுப் பொலிவுடன் காணப்படுவீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். அவர்களின் துணையுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளையெல்லாம் இனி விரைந்து முடிப்பீர்கள்.

தனுசு: பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மகரம்: வேலைகளை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதமோ தர வேண்டாம்.

கும்பம்: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். மனஉறுதியுடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்: அரசு அதிகாரிகளின் துணையுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் செலவை ஏற்படுத்தினாலும் புதிய அனுபவம் கிடைக்கும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள். 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close