[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 08:36 am
  • அ+ அ-

மேஷம்: வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவினர்களால் மனக்கசப்பு வரக்கூடும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

ரிஷபம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம், சாமர்த்தியம் பிறக்கும். தோல்வி பயம் நீங்கும். சகோதரி தக்கசமயத்தில் உதவுவார். பழைய கடனைப் பைசல் செய்ய வழி பிறக்கும்.

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். திடீர் பயணம் உண்டு.

கடகம்: முன்கோபம் அதிகமாகும். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் அடிக்கடி நினைவுக்கு வரும்.

சிம்மம்: நெருங்கிய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்னச் சின்ன தடைகள் ஏற்படக் கூடும்.

கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடனைப் பைசல் செய்ய புதுவழி பிறக்கும். குடும்பத்தில் நிலவிய கூச்சல், குழப்பம் நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும்.

தனுசு: வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்திக்கு மீறி எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ யாருக்கும் தர வேண்டாம். கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள்.

மகரம்: சமயோசித புத்தியால் பல காரியங்களையும் வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். எதார்த்தமாகவும், சாதுர்யமாகவும் பேசி எல்லோருடைய மனதிலும் இடம் பிடிப்பீர்கள்.

கும்பம்: பழைய வழக்கில் உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கிவர வாய்ப்பிருக்கிறது.

மீனம்: முன்கோபம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நீண்டநாட்களுக்குப் பின்னர் பால்ய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close