[X] Close

ரோகிணி நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 10:03 am
  • அ+ அ-

-Ramji V_50241

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அன்பும் பாசமும் கருணையும் ஒருங்கே அமையப் பெற்ற ரோகிணி நட்சத்திர அன்பர்களே. நீங்கள் மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள்.

இந்த வருடம் அடிக்கடி உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை  இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டுச் செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லரைச் சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரவு திருப்தி தரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருப்பது போல் உணர்வார்கள். மேலதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம். கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

குடும்பத்தில் சின்னச்சின்னச் சண்டைகள் உண்டாகலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.  பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுபகாரியங்களில் இருந்து வந்த தடைகள் அகலும்.

பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம்  சண்டைசச்சரவு ஏற்படாமல் இருக்க கவனமாகப் பேசி பழகுவது நல்லது. எதிலும் நிதானம் தேவை.

அரசியல்வாதிகளைப் பொருத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.

perunkulam photo.jpg 

கலைத்துறையினர் கடினமாக உழைத்தால் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.  

மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த  மெத்தனப் போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: கிருஷ்ணருக்கு வெண்ணெய் வழங்குங்கள். தரிசனம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.

மதிப்பெண்கள்: 70% நல்ல பலன்கள் கிடைக்கும்.

+ சுபநிகழ்வுகள் உண்டு

- கருத்து வேறுபாடுகள் வரலாம்

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close