[X] Close

விகாரி வருட பொதுப்பலன்கள் : பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும்!


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 09:12 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்கlலகரமான 1194ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீ விகாரி வருஷம் உத்தராயனம் வஸந்தருது சித்திரை மாதம் 01ம் தேதி (14.04.2019) ஞாயிற்றுக்கிழமை - சுக்லபக்ஷ நவமியும் - ஆயில்ய நக்ஷத்ரமும் - சூலம் நாமயோகமும் - கௌலவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 17.18க்கு (பகல் 01.15மணிக்கு) கடக லக்னத்தில் விகாரி வருஷம் பிறக்கிறது.

கிரக பாதசார விபரங்கள்:

லக்னம் - ஆயில்யம் 1ம் பாதம் - புதன் சாரம்

சூர்யன் - அசுபதி 1ம் பாதம் - கேது சாரம்

சந்திரன் - ஆயில்யம் 2ம் பாதம் - புதன் சாரம்

செவ்வாய் - ரோஹிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம்

புதன் - உத்திரட்டாதி 2ம் பாதம் - சனி சாரம்

சுக்ரன் - பூரட்டாதி 3ம் பாதம் - குரு சாரம்

சனி - பூராடம் 2ம் பாதம் - சுக்கிரன் சாரம்

ராஹு - புனர்பூசம் 3ம் பாதம் -  குரு சாரம்

கேது - பூராடம் 3ம் பாதம் - சுக்கிரன் சாரம்

 

புதன் தசை இருப்பு: 08 வருஷம் - 04 மாதம் - 20 நாள்

 

விகாரி வருஷத்தின் நவநாயகர்கள்:

ராஜா - சனி

மந்திரி - சூரியன்

அர்க்காதிபதி - சனி

மேகாதிபதி - சனி

ஸஸ்யாதிபதி - புதன்

சேனாதிபதி - சனி

இரஸாதிபதி - சுக்கிரன்

தான்யாதிபதி - சந்திரன்

நீரஸாதிபதி - புதன்

பசுநாயகர் - கோபாலன்

rasi.jpg 

 

விகாரி வருஷ வெண்பா:

பார விகாதிதனிங் பாரண நீருங் குறையும்

மாரியில்லை வேளாண்மை மத்திபமாம் - சேரார்

பயம் அதிகம் உண்டாம் பழையோர்கள் சம்பாத்

திய வுடைமை விற்றுண்பார் தேர்

- இடைக்காடர் வாக்கு

 

பொது பலன்கள்:

ஜெகத் உலக ஜாதகம் பிறப்பு ஆயில்யம் நட்சத்திரம் - கடக ராசி - கடக லக்னம் - ஆயில்ய சாரம் கொண்டு - தனுசு லக்ன நவாம்சை - மகர சந்திர நவாம்சையில் பிறக்கிறது.

ஆண்டு பிறக்கும் போது உச்ச ராஜகிரக சூரியனை குரு பார்ப்பது நல்ல அமைப்பு. இந்த வருடத்தின் தோஷம் அனைத்தும் இதன் மூலம் விலகுகிறது.

வருடம் பிறக்கும் போது வர்கோத்திர யோகம் - சகட யோகம் - அம்சையில் சுக்கிர மங்கலயோகம்  - கடக ராஜ யோகம் - ஆகியவை ஏற்படுகிறது. தோஷத்தை பொருத்தவரை குரு - சனி இணைவால் பிரம்மஹத்தி தோஷம் - குரு, சந்திரன் சஷ்டாஷ்டக தோஷம் ஆகியவை ஏற்படுகிறது. ஆனாலும் குரு ஆட்சியாக இருப்பதால் அனைத்து தோஷங்களும் விலகுகின்றன.

இந்த ஆண்டின் நட்சத்திர தேவதை உமா மகேஸ்வரர். பஞ்சபக்ஷி - ஆந்தை. இந்த வருடத்தின் ஆதாயம் 59 - விரயம் 62. மழையின் அளவு வெண்பாவில் குறைவு என்று சொன்னாலும் கிரகநிலைப்படி மழையின் அளவு அதிகமாகவே இருக்கும்.

இந்த வருடத்தில் வெயில் மக்களை வாட்டி வதைக்கும். அதிகபக்ஷ வெப்பநிலை பதிவாகும். கட்டிடங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம்.

லக்னத்திலேயே சந்திரன் இருப்பதால் பெண்களுக்கு இந்த வருடம் சாதகமாக அமைந்திருக்கும். நிம்மதியாக இருப்பார்கள். அதிக மழைப் பொழிவும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். தன ஸ்தானத்தை செவ்வாய் - குரு - சுக்கிரன் ஆகியோர் பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி காணப்படும். பங்குச் சந்தை அதிக வளர்ச்சி பெறும். உலக அளவில் பொருளாதாரம் நல்ல முன்னேற்றம் காணும்.

தைரிய ஸ்தானத்தை புதன் பார்ப்பதாலும் சனி பார்ப்பதாலும் மக்களிடையே தைரியம், நம்பிக்கை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் சில குழப்பங்கள் அவ்வப்போது நிகழும். ஆனாலும் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும்.

பூர்வ புண்ணியஸ்தானத்தை அதன் அதிபதி செவ்வாயே பார்ப்பதால் குழந்தை பிறப்புகள் அதிக அளவில் நிகழும். நாடுகளுக்கிடையே போர் பதற்றம் குறையும். ரணருண ரோக சத்ரு ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் புதிய வியாதிகள் தோன்றுவதும் அதே வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிப்பதும் நிகழும். அதிக திருமணங்கள் நடைபெறும். பண மோசடி அதிகரிப்பதும் அரசாங்கம் புதிய சட்டங்கள் மூலமாக அதை தடுப்பதும் ஏற்படும்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு கடுமையாக இருக்கும். தங்கம் விலை விண்ணைத் தொடும்.

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close