[X] Close

வார ராசிபலன் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 16 வரை (துலாம் முதல் மீனம் வரை)


11-16

  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 09:49 am
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம்  மனம்மகிழும் சம்பவங்கள் உண்டாகும். நிம்மதியும்,மனோதிடமும் உண்டாகும்.  தெளிவான சிந்தனையுடன் எதிலும்ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதியநபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.திடீர் செலவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியானகொண்டாட்டங்கள் இருக்கும். குடும்பத்தில் சுகம் நிலவும். கணவன்மனைவிக்குள் திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால்பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்துகொள்வீர்கள்.

விருந்துகளுக்குச் சென்று மகிழ்வீர்கள். தொழில், வியாபாரம் சிக்கலின்றி நடைபெறும். தொழில் சார்ந்த தகவல்கள் நன்மையைத் தரும்.புதிய தொழில்கள் கைகூடும். பெண்களுக்கு வீண் அலைச்சலும்பயணங்களும் ஏற்படலாம். நேரம்தவறி உண்பதைத் தவிர்க்க வேண்டும்.சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். மாணவர்கள் சக மாணவர்களின்நட்பைப் புரிந்து கொள்ளலாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.

அதிர்ஷடக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்: ஊதா, கருநீலம்

எண்கள்: 1, 9 

பரிகாரம்: பிரதோஷ காலத்தில்நந்திதேவரையும், சிவனையும் வணங்கி சனி பகவானுக்குநல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது துன்பங்களை போக்கும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த பணவரவு தாமதப்படலாம்.  நிம்மதி  குறையும்.வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். எனவே கவனமாக எதிலும்ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்தஉதவிகளும் கிடைக்கும். எந்தக் காரியத்தையும் ஆராய்ந்து பார்த்துசெய்யுங்கள். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். எதிரிகள்அடங்கியே இருப்பார்கள். அலைச்சல் தரும் வேலைகளைக் குறைத்துக்கொள்ளவும். திடீர் பயணங்கள் ஏற்படும். காரியங்கள் எதிர்ப்பார்த்தபடிநடக்கும்.

தொழில் போட்டியாளர்கள் அடங்குவார்கள். சிறு வியாபாரிகள்கூட நல்ல லாபத்தைக் காண முடியும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளைச்செய்ய வேண்டி இருக்கும். எந்திரங்களை  இயக்குபவர்கள் கவனமாகஇருத்தல் வேண்டும். பெண்கள் அடுத்தவர்களின் பிரச்சினையைத் தீர்த்துவைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும்.மாணவர்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெற்றுசந்தோஷமடைவீர்கள். கிடைக்க வேண்டிய உதவிகள் தக்க சமயத்தில்கிடைக்கும்.

அதிர்ஷடக் கிழமைகள்: செவ்வாய், புதன்

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, நீலம்

எண்கள்: 4, 5

பரிகாரம்: பெருமாளையும்தாயாரையும் வணங்கி வர வறுமை நீங்கும். கல்வியறிவு பெருகும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்தசில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். தெளிவான முடிவுகளை எடுப்பதனால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். அரசாங்கவிவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமானவேலைகள் கூடச் சுலபமாக முடியும். குடும்பத்தாருடன் பாசத்துடன்பழகுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். ஊழியர்கள் தொடர்பில்அனைத்து முடிவுகளையும் சற்று ஆலோசித்துச் செய்ய வேண்டும்.

பொருளாதாரம் ஏற்றத்துடன் காணப்படும். எதிலும் நிதானத்துடன்நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் திறமையாகப் பணிகளைச் செய்து பாராட்டுகள் பெறுவார்கள். சிலருக்குப் பதவி உயர்வும்கிடைக்கக்கூடும்.  இடமாற்றம் உண்டாகலாம். பெண்கள் ஆடைஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும்என்ற மனக்கவலை ஏற்படும். மாணவர்கள் எளிதில் பாடங்களைப் புரிந்துகொள்வார்கள்.

அதிர்ஷடக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு

எண்கள்: 5, 7 

பரிகாரம்: ருத்ரஜெபம் செய்து குருவுக்கு  கொண்ட கடலை நிவேதனம் செய்துவணங்குவது வருமானத்தை உயர்த்தும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதற்குத் தாமதமாகும்.அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.வரவேண்டிய பணம் தாமதமாகும். பூர்வீகச் சொத்துக்களில் பிரச்சினைகள்தீரும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் அனுசரித்துச் செல்ல வேண்டும். தந்தைவழி உறவினர்களின் உதவி உண்டு.தொழில், வியாபாரம்சிறப்பாக நடைபெறும்.

எண்ணியபடி வருமானம் இருக்கும். கடந்தகாலத்தில் திணறிய காரியங்களை இப்போது லாவகமாகச் செய்துமுடிப்பீர்கள். உத்தியோகத்தில் திறமையாகப் பணிகளைச் செய்துமுடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்படுவீர்கள்.பெண்கள் அயராது உழைக்க வேண்டி இருக்கும்.தேவையானவை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன்செயல்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவீர்கள்.  முன்னேற்றம்ஏற்படும்.

அதிர்ஷடக் கிழமைகள்: வெள்ளி, சனி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை, கருப்பு

எண்கள்: 1, 3

பரிகாரம்: ரங்கநாதரைத் தரிசனம்செய்து வணங்குவது சுபிட்சத்தைத் தரும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம்  வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். அக்கம்பக்கத்தில்இருப்பவர்களுடன் சில்லறைச் சண்டைகள் ஏற்பட்டு நீங்கும். வீட்டுக்குத்தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தூரத்துச் சொந்தங்களால்நன்மை உண்டாகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்லமுன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய கிளைகள் தொடங்க வேண்டும்என்ற எண்ணம் உண்டாகும். வங்கிக்கடன் சார்ந்து பெரிய அதிகாரிகளைச் சந்திப்பீர்கள். ஊழியர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுப்பீர்கள்.

உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பார்கள். புதியபொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும்.வீட்டில் சுபகாரியம் நடப்பதற்கான சூழல் கனியும். பெண்கள் எந்தவொருசிக்கலையும் எதிர்த்துப் போராடுவீர்கள். அதற்கான துணிச்சல் மனதில்உண்டாகும். மாணவர்கள் உற்சாகமாகப் படிப்பில் ஈடுபடுவார்கள்.கல்விக்கு தேவையான அனைத்து உப கரணங்களும்  கிடைக்கும். 

அதிர்ஷடக் கிழமைகள்: ஞாயிறு, சனி

திசைகள்: தெற்கு, மேற்கு

நிறங்கள்: கருநீலம், பிரவுன்

எண்கள்: 8, 9

பரிகாரம்:  அருகில் இருக்கும்சிவன் கோயிலுக்குச் சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்தகாரிய வெற்றி உண்டாகும். மனோபலம் கூடும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் பொருள்சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில்கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். எடுத்த காரியம்தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம்கண்விழிக்க வேண்டி வரலாம், கவனம் தேவை. குடும்பத்தினருக்குத்தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள்ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வியில் கவனம்செலுத்துவீர்கள்.

புதிய தொழில்கள்  பற்றிய சிந்தனை மேலோங்கும்.தொழில் விஷயமாகப் பயணங்கள் செய்ய நேரிடும்.உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம். பெண்கள்மிக கவனமாகப் பேசுவதும், கோபத்தைக் குறைப்பதும் நன்மை தரும்.எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். மாணவர்கள் அதிகமாக உழைத்துஆசிரியர்களின் பாராட்டைப் பெற வேண்டி எண்ணுவார்கள்.

அதிர்ஷடக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு

எண்கள்: 5,7 

பரிகாரம்: ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வணங்கி வரஉடல் ஆரோக்கியம் பெறும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close