[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 08:55 am
  • அ+ அ-

மேஷம்: அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்து பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகு, இளமை கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

மிதுனம்: புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவு வந்து போகும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். திடீர் பயணம் உண்டு.

கடகம்: பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்லுங்கள். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள். மறைமுகப் பிரச்சினைகள் வரும். வீடு, வாகனம் செலவு வைக்கும்.

சிம்மம்: பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் வலிய வந்து பேசுவார்கள்.

கன்னி: பழைய உறவினர்கள், நண்பர்களை நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்து மகிழ்வீர்கள். கடன் பிரச்சினைகளைத் தீர்க்க வழி பிறக்கும். எதிர்பாராத காரியங்கள் திடீரென நிறைவேறும்.

துலாம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி சந்தோஷம் நிலைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பம் ஏற்படும்.

விருச்சிகம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். நினைத்த வேகத்தில் வேலைகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை உண்டு.

தனுசு: சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சரளமாக இருக்கும். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.

கும்பம்: பொறுப்பு, பதவி உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் யாவும் எளிதில் வெற்றியடையும். வீண் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

மீனம்: மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கடின உழைப்பால் வெற்றிகளைக் குவிப்பீர்கள்.  பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close