[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 08:53 am
  • அ+ அ-

மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதிய நண்பர்கள் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும்.

ரிஷபம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சொந்தபந்தங்களில் சிலரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். பிரபலமானவர்களால் ஆதாயம் கிடைக்கும். சுபச் செலவுகள் உண்டு.

கன்னி: குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணப்புழக்கம் கணிசமாக உயரும் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

துலாம்: யாரையும் நம்பி முக்கியமான பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வேலைச்சுமை அதிகரிப்பால் அசதி ஏற்படும்.

விருச்சிகம்: யாரிடம் எப்படி பழக வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். திருமண முயற்சி வெற்றி பெறும். வீடு, மனை வாங்குவீர்கள்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்தபந்தங்கள் உங்களைத் தேடி வருவார்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைவரும் ஏற்கும்படி இருக்கும்.

மகரம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நீண்டநாள் கனவு நனவாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

மீனம்: சகோதரர் வகையில் நன்மை உண்டு. பூர்வீகச் சொத்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பண வரவு திருப்தி தரும்.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close