[X] Close

வார ராசிபலன் ஏப்ரல் 04 முதல் ஏப்ரல் 10 வரை (துலாம் முதல் மீனம் வரை)


04-10

  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 10:54 am
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய தொடர்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். சிற்றின்பச் செலவுகள் கூடும். அக்கம்பக்கத்தவரிடம் கவனமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது.

தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன்பாக்கி வசூலாகும். கடன் பிரச்சினைகள்  தொல்லை தராது.  போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாகலாம். பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷடக் கிழமைகள்: வெள்ளி, சனி

திசைகள்:  கிழக்கு, மேற்கு

நிறங்கள்: வெள்ளை, இளஞ்சிவப்பு

எண்கள்:1, 5

பரிகாரம்: முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சினைகளும் தீரும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகமும் கவுரவமும் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினரால் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். சிற்றின்பச் செலவுகள் கூடும். அக்கம்பக்கத்தவரிடம் கவனமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது.

தொழில், வியாபாரத்தில் புதிய யுக்தியை கையாண்டு எப்போதும் போல் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முழு ஆர்வத்துடன் வேலையைச் செய்து  முடிக்க முடியும். பெண்களுக்கு, தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். 

அதிர்ஷடக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்: 5, 8 

பரிகாரம்:  நவக்கிரகத்துக்குதீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்சினை தீரும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த முயற்சிகள் கைகூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோதைரியம் கூடும்.  குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். கவனம் தேவை. கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். உறவினர் வருகை இருக்கும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் கடின உழைப்புக்குப் பின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு, திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை குறைப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

அதிர்ஷடக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு

எண்கள்: 3, 5

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி அஷ்டகம் படித்து தட்சிணாமூர்த்தியை வணங்கி வருவதால் பணகஷ்டம் தீரும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். நீண்ட நாட்களாக  இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்குள்அன்யோன்யம் உண்டாகும். பிள்ளைகளிடம் அறிவுத் திறமை வெளிப்படும்.  தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும்.

வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்துக்குப் பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில்   முக்கிய முடிவுகளை மேலதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வது உங்களைப் பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும். பெண்களுக்கு  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களால் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். மாணவர்களுக்கு நன்மைகள் நடக்கும். விட்டுக் கொடுத்து போவதன் மூலம் அனைத்திலும் நன்மை நடக்கும்.

அதிர்ஷடக் கிழமைகள்: ஞாயிறு, சனி

திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு

நிறங்கள்: கருப்பு, கருநீலம்

எண்கள்: 5, 7, 8

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சினை குறையும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம்  வீண் அலைச்சல், காரியத்தடை ஏற்பட்டாலும் முடிவில் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். தேவையான வசதிகள் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். செலவு கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும்.  அக்கம்பக்கத்தவருடன் சில்லறைச் சண்டைகள் வரலாம். கவனம் தேவை.  தந்தைவழியில் தொழிலை நடத்தி வருபவர்களுக்கு நல்ல உற்சாகமான காலகட்டமாகும்.

பங்குதாரர்கள் உங்களையே நம்பி அனைத்தையும் ஒப்படைத்து விடுவார்கள். உத்தியோகத்தில்   புதிய முடிவுகளைத் தள்ளிப் போடுவது நல்லது. நேரத்துக்கு உணவருந்த முடியாமல் போகலாம். பெண்களுக்கு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அந்தஸ்து உயரும். மாணவர்களுக்குப் படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.  கல்வியில் வெற்றி பெறத் தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். கல்விப் பயணம் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷடக் கிழமைகள்: வெள்ளி, சனி

திசைகள்: வடக்கு, மேற்கு

நிறங்கள்: கருநீலம், பிரவுன்

எண்கள்: 1, 5, 7

பரிகாரம்:  அம்பாளுக்கு இளநீர் நைவேத்யம் செய்யுங்கள். செல்வநிலை உயரும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அனைவரும் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களது செயல்கள் அனைவரையும் திருப்திபடுத்தும். ஏழைகளுக்கு உதவி செய்வீர்கள். சுணக்கமான நிலையிலிருந்து விடுபடுவீர்கள். தாய்மாமன்வழி உறவுகளில் இருந்த பிரச்சினைகள் தீரும். புதிய வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வளரும்.

தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் குறைவாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பாலினத்தவரிடம் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு புதிய தொடர்புகளால் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்களுக்கு மனத்தில் சில தேவையில்லாத எண்ணங்கள் தோன்றலாம்.

அதிர்ஷடக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு

எண்கள்: 5, 9 

பரிகாரம்: துர்க்கை அம்மனை  எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். காரியத் தடை நீங்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close