[X] Close

வார ராசிபலன் ஏப்ரல் 04 முதல் ஏப்ரல் 10 வரை (மேஷம் முதல் கன்னி வரை)


04-10

  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 10:54 am
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்.  அலைச்சலால் சரியான நேரத்துக்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்குவன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் மறையும். கணவன் மனைவிக்குள் நீடித்து வந்த மனவருத்தம் நீங்கிச் சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும்.

வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் திருப்தி அளிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய வர்த்தக ஆர்டர்களுக்காக உழைக்க வேண்டி வரலாம். உத்தியோகத்தில்  நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்தேறும். பெண்களுக்கு, தடைகளை தாண்டி வெற்றி நடை போடுவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றத்துக்கான வாய்ப்பு வரும். தீவிர முயற்சி எடுத்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

அதிர்ஷடக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, வெள்ளை

எண்கள்: 1, 5 

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை  ஆலோசித்து செய்வது நல்லது. மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடவும். குடும்பத்தில் கருத்து வேற்றுமை மறையும். கணவன், மனைவிக்குள் நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். அக்கம் பக்கத்தினரிடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

புதிய தொழிலில் இறங்குவது பற்றிய ஆலோசனை நல்லபடியாக இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளுடன்  கவனமாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு  சுலபமாக காரியங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உருவாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். மாணவர்களுக்கு, படிப்பில் நாட்டம் நீடிக்கும். உடனிருப்பவர்களுடன் மனக்கிலேசம் வரலாம். எச்சரிக்கை தேவை.

அதிர்ஷடக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, வெள்ளை

எண்கள்: 5, 6

பரிகாரம்:  விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கி வர துன்பமும், தொல்லையும்  நீங்கும்.

 

மிதுன ராசி வாசகர்களே

 இந்த வாரம்  வாழ்க்கைக்குத் தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.  புதிய ஆடை கள், ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கத் திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். எடுத்த காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம். 

தொழிலில் மெத்தனமான போக்கு காணப்படும். தொலைதூரத் தகவல்கள் உங்கள் தொழிலுக்கு ஏற்றதாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாகப் பணியாற்ற வேண்டி இருக்கும்.  அதே நேரத்தில் பணிகளைச் செய்து முடிப்பதற்குத் தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். மாணவர்களுக்கு, நேரத்தின் அவசியத்தைப் புரிந்து கொண்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷடக் கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை, நீலம்

எண்கள்: 2, 6

பரிகாரம்: சிவனையும் நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சினைகளும் சுமூகமாக முடியும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம்  நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின்  காரியங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை. திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. குடும்பத்தினரிடம் இணக்கம் இருக்காது. கணவன் மனைவிக்குள் சில்லறை பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். நண்பர்கள் வழி நன்மை உண்டாகும். தொழில், வியாபாரம் இனிச் சீராகும்.

பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் கவனமாக இருக்க  வேண்டும். பெண்களுக்கு, சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். மாணவர்களுக்கு, கோபத்தைக் குறைப்பதற்கு யோகா, உடற்பயிற்சி செய்யுங்கள்.

அதிர்ஷடக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, ப்ரவுன்

எண்கள்: 7, 8 

பரிகாரம்: துர்க்கை அம்மனைப் பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம்  எதிர்பார்த்த காரியங்கள் மனத்துக்குத் திருப்தி அளிக்கும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்யத் தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக  இருக்க வேண்டும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்குள் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நன்மை தரும். உறவினர், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் கண்ணியத்துடன் நடந்து கொள்வீர்கள். கிடைக்க வேண்டிய அனைத்து உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமாக வேலையைச் செய்து முடிப்பீர்கள். பாராட்டுகள்  கிடைக்கும். பெண்களுக்கு அலுவலகத்தில் அதிகப் படியான வேலைப் பளுவால் உடல் நிலை மோசமாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கல்விக்கான செலவு கூடும்.

அதிர்ஷடக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

திசைகள்: தெற்கு, தென் கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு

எண்கள்: 5, 7 

பரிகாரம்: சிவன் கோயிலுக்குப் போய் வணங்கிவர கடன் பிரச்சினை தீரும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணவரவு தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்ல வேண்டும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முக்கியமான முடிவுகளை உடனிருப்பவர்களிடம் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. பெண்களுக்கு அதிகப்படியான செலவுகள் வரக் கூடும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷடக் கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்: பச்சை, நீலம்

எண்கள்: 7, 9

பரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலை அர்ப்பணித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close