[X] Close

உங்கள் ஜாதகத்தில் ’ராஜயோகம்’; அறிந்துகொள்ள இதோ… எளிய வழி!


jodhidam-arivom-2-27

ஓவியம் : பத்மவாசன்

  • kamadenu
  • Posted: 03 Apr, 2019 10:25 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2- 27 : இதுதான்... இப்படித்தான்! 

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

நாம் அடுத்து பார்க்கப்போவது “ராஜ யோகம்.” .

ராஜ யோகம் என்ன செய்யும்? நம்முடைய ஜாதகத்தில் ராஜயோகம் இருக்கிறதா என எப்படி அறிவது?

இதையெல்லாம் பார்க்கலாம்.

உங்கள் ஜாதகத்தில் 9ம் இடம் என்னும் பாக்கிய ஸ்தானம், 2ம் இடம் எனும் தன ஸ்தானம், 10 ம் இடம் எனும் கர்ம ஸ்தானம், 6 ம் இடம் என்னும் எதிரிகளை வெல்லும் ஸ்தானம், 3 ம் இடம் என்னும் எதிலும் வெற்றி என்கிற ஜெய ஸ்தானம்…

இப்படி 5 ஸ்தானங்களும் வலுப்பெற வேண்டும்.

 “எங்களுக்கு ஜோதிடம் தெரியாதே, நாங்கள் எப்படி அறிவது” என்பவர்களுக்கு....

சூரியன் சிம்மத்திலும், குரு கடகத்திலும், செவ்வாய் மேஷம் அல்லது விருச்சிகத்திலும், ராகு தனுசிலும் அமையப்பெற்ற ஜாதகததாரர்கள்  இந்த ராஜ யோகத்தைக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

சென்ற பதிவில் ராசிகட்டம் தந்துள்ளேன். அதை ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.

சரி… இது எப்படி ராஜ யோகத்தை தரும்? என்று கேட்கிறீர்கள்தானே.  

ராஜாக்களின் ஆளுமைகள் நடந்த காலத்தில் ஒரு இளவரசன் பிறப்பது சாதாரணமான, லேசுப்பட்ட காரியம் அல்ல.

 இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.

அரசன் தன் பட்டத்து அரசியை நினைத்த போதெல்லாம் நெருங்கிவிட முடியாது. ராஜகுரு என்பவர் ஒவ்வொரு அரசசபையிலும் இருப்பார். அவர் நாள் நேரம் என்றெல்லாம் குறித்துத் தருவார். அந்த நேரத்தில் மட்டுமே அரசர் ராணியிடம் நெருங்க முடியும்.

அந்த நேரம் கடந்து விட்டதும் அரசன் அரசியைவிட்டு கட்டாயப்படுத்தி பிரிக்கப் படுவார். பிரியவேண்டும் என்பது எப்படி கட்டாய, ராஜகுருவின் உத்தரவோ… அதேபோல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் இருவரும் இணைந்தே ஆகவேண்டும் என்பதும் கட்டாயம்.

இந்த நேரம் காலம் என்பது தினமுமோ, வாரத்திலோ, மாதத்திலோ வராது. வருடத்திற்கு ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே அமையும். 

இதன் காரணமாகவே அரசனின் இச்சை தீர்க்கப்படவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான்... “அந்தப்புரம்.” இந்த அந்தப்புரத்தில் உருவாகும் குழந்தைகளுக்கு எந்தவிதத்திலும் ராஜ்ஜியத் தொடர்புகள் கிடையாது. வாரிசு அந்தஸ்தும் கிடையாது.

அதே சமயம் ராணி என்பதற்காக சிறப்பு மரியாதை இருக்குமே தவிர, உயரிய அந்தஸ்து கிடையாது.

ராணி என்பவர்... ராஜ்ஜியத்தை ஆளக்கூடிய வல்லமையும், புகழ் பெற்ற அரசனாகும் வலிமையும் கொண்ட வாரிசை பெற்றுத்தரும் இயந்திரம் மட்டுமே. ஓர் கருவி அவ்வளவுதான்!  

இப்படி உண்டாகியுள்ள கருவை, சிசுவை, குழந்தையை ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்த நேரத்தில் பிரசவித்தே ஆகவேண்டும். குறிப்பிட்ட நேரத்தைக் கடப்பது போல் தெரிந்தால்,.. இரக்கமே இல்லாமல்  ராணியின் வயிறு அறுக்கப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்படும். கிட்டத்தட்ட சிசேரியன். அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது.

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக பிரசவ வலி வந்தால்.....? 

அப்போதும் இரக்கமோ கருணையோ காட்டாமல், அரசியை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு பிரசவ நேரம் வரும்வரை காத்திருப்பார்கள்.

சரியான நேரம் வந்தவுடன் பிரசவம் பார்க்கப்படும். அது வரை ராணியின் உயிர் இருந்தால் அவருக்கும் அது மறுபிறவி. இறந்தால் கவலைப்படமாட்டார்கள். அவர்களுக்கு தேவை “நாட்டை காப்பாற்றும் ஒரு அரசன்” அவ்வளவே.

இப்படி “தன் தாயைக் கொன்று பிறந்த அரசர்கள்” நம் தமிழ்மண்ணில் காலத்தினால் அழிக்க முடியாத, வரலாற்று பொக்கிஷங்களையும், உலகை ஆச்சரியப்பட வைக்கும் சாதனைகளையும் செய்துள்ளனர், இன்றும் நாம் அதன் பலன்களை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இப்படி நாள் கிழமை குறிக்கப்பட்டு பிறக்கும் குழந்தை “ராஜ யோகத்தோடு” தான் பிறப்பான் என்பது உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

சரி… நாம் நிகழ்காலத்துக்கு வருவோம்.

“நாம்தான் இப்படி ஏழையாக, பெரிய அளவில் வசதி இல்லாமல் பிறந்து விட்டோம். நம்முடைய குழந்தைகளாவது அரசனுக்கு நிகரான வாழ்க்கை அமையட்டும்” என நினைப்பவர்களுக்கு... 

சில ரகசியங்களை உங்களுக்குத் தருகிறேன். மேலும் என்ன மாதிரியான பலன்கள், யோகங்கள் கிடைக்கும் என்பதையெல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போம்.

- தெளிவோம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close