[X] Close

சந்ததி வளர்க்கும் அமாவாசை… நாளை! முன்னோர் ஆராதனை மறக்காதீங்க


amavasai

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Apr, 2019 10:00 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

நாளை 4.4.19 புதன்கிழமை அமாவாசை. இந்தநாளில், முன்னோர் ஆராதனை செய்ய மறக்காதீர்கள். நம் சந்ததி சிறப்புடனும் செழிப்புடனும் தழைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அமாவாசை என்பது பித்ருக்களுக்கான நாள். இந்தநாளில், பித்ருக்கள் எனப்படும் முன்னோர்கள்,  

வருடத்துக்கு  மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம். தமிழ்மாதப் பிறப்பு, கிரகண காலம், மாதந்தோறும் வருகிற அமாவாசை, இறந்தவர்களின் திதி நாள் முதலான நாட்களில் தவறாமல் முன்னோர் ஆராதனை செய்யவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். பித்ருக்களை ஆராதனை செய்யச் செய்ய, வழிபாடுகள் நடத்த நடத்த நாமும் நம் குடும்பமும் சிறப்புற வாழ்வோம். குடும்பத்தில் உள்ள கருத்துவேற்றுமைகள் நீங்கி, ஒற்றுமை நீடிக்கும்.

வீட்டில் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும். துக்கங்கள் காணாமல் போகும். வீட்டில் உள்ள தரித்திர நிலையை மாற்றி அருள்வார்கள் முன்னோர்கள்.

நாளைய தினம் 4.4.19 அமாவாசை. இந்தநாளில், மறக்காமல் தர்ப்பணம் செய்து பித்ருக்களை வழிபடுங்கள். வீட்டில் இறந்த முன்னோர்களின் படங்களுக்கு பூக்களால் அலங்கரியுங்கள். சந்தனம் குங்குமமிடுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்யுங்கள். முக்கியமாக, காகத்துக்கு உணவிடுங்கள்.

முடிந்தால், நான்குபேருக்கு, உணவுப்பொட்டலம் வழங்குங்கள். முன்னோரை நினைத்து நாம் செய்யும் இந்தத் தர்மம், நம்மை மட்டுமின்றி நம் சந்ததியை சீரும்சிறப்புமாக வாழவைக்கும். வாழையடி வாழையென நம் வம்சம் தழைத்தோங்கும்.

நாளைய தினம், அமாவாசையில் மறக்காமல் முன்னோரை வழிபடுங்கள்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close