[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 03 Apr, 2019 09:29 am
  • அ+ அ-

மேஷம்: குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

ரிஷபம்: அதிரடி திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம்: பிரபலங்களின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும்.

கடகம்: குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். முக்கிய கோப்புகளைக் கவனமாக கையாளுங்கள். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.

சிம்மம்: சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி: பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த வழக்கு நல்ல விதத்தில் முடியும். 

துலாம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும்.

விருச்சிகம்: புது எண்ணங்கள் தோன்றும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

தனுசு: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து வரும் பணத்தால் சமாளிப்பீர்கள். பேச்சுத் திறமையால் காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

மகரம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்: தடைபட்ட வேலையை சாதுர்யமாகப் பேசி முடிப்பீர்கள். சிலவற்றுக்கு உங்களின் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர்வீர்கள். வெளி உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்.

மீனம்: எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியது வரும். உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும்.

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close