[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 08:50 am
  • அ+ அ-

மேஷம்: வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.

ரிஷபம்: மன உளைச்சல் நீங்கும். எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பால்ய நண்பரை எதிர்பாராது சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: செயற்கரிய காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப் பீர்கள். மனக்குழப்பம் நீங்கும். வேற்று மதத்தினரால் நன்மை கிட்டும். தந்தையாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.

கடகம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிறருக்கு உதவி செய்யப்போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராடுவீர்கள்.

சிம்மம்: எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணம் மகிழ்ச்சி தரும். விலகியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்துவந்த தேக்க நிலை மாறும். திடீர் பயணம் உண்டு.

விருச்சிகம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்படக்கூடும். புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். பணவரவு உண்டு.

தனுசு: பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். விருந்தினர் வருகை உண்டு.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை விரைந்து முடிப பீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்களின் ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆறுதல் பெறுவீர்கள். அலைச்சல், செலவு அதிகரிக்கும்.

மீனம்: பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close