[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 09:13 am
  • அ+ அ-

மேஷம்: நீண்டகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

ரிஷபம்: கடந்தகால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்துகொள்வீர்கள்.

மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்களுடன் நட்பு மலரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

கடகம்: சிலரது விமர்சனங்கள், கேலிப் பேச்சுக்கு ஆளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். பேச்சில் பொறுமை தேவை.

சிம்மம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். எக்காரியத்திலும் நிதானம் அவசியம்.

கன்னி: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பால் ஆதாயம் உண்டாகும்.

துலாம்: அடுத்தவரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களைக் கண்டறிவீர்கள். பணவரவு உண்டு.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகன வகையில் செலவு ஏற்படும். கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள்.

தனுசு: துணிச்சலாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். மனதுக்கு இதமான செய்தி வரும்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். இழுபறியாக உள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பீர்கள்.

கும்பம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து, வெளி நபர்களிடம் பேச வேண்டாம். உறவினர், நண்பர்களால் வீண் அலைச்சல், செலவினங்கள் உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

மீனம்: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது அதிக கவனம் தேவை. பணப் புழக்கம் உயரும்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close