[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 08:30 am
  • அ+ அ-

மேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். கடனாகக் கொடுத்த பணம் இழுபறிக்குப் பின்னர் கைக்கு வரும்.

மிதுனம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல் ஏற்படக் கூடும். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: புது வாகனம் வாங்குவீர்கள். வர வேண்டிய தொகை கைக்கு வரும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசியலில் செல்வாக்குக் கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

கன்னி: உறவினர்களின் கனிவான விசாரிப்பு ஆறுதலைத் தரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களைக்கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்களின் தனித்திறமை அனைத்து விஷயங்களிலும் பளிச்சிடும். பிரமுகர்களால் பாராட்டப்படுவீர்கள்.

தனுசு: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொந்தபந்தங்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

மகரம்: உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். இடம், பொருள் ஏவலறிந்து கவனமுடன் பேசுங்கள். பணவரவு உண்டு.

கும்பம்: வீண் வறட்டுக் கவுரவத்துக்காக சேமிப்புகளைக் கரைக்காதீர்கள். வேலைச்சுமை, திடீர் பயணம் வந்து போகும். கடன் வாங்கும் சூழல் ஏற்படும். விருந்தினர் வருகை உண்டு.

மீனம்: நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close