[X] Close

மதுரை தபால் வாக்குப்பதிவு மையத்தில் வாக்குச் சேகரித்த அதிமுக வேட்பாளர்: எதிர்க்கட்சியினர் புகாரால் வெடித்த சர்ச்சை


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 11:31 am
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் தடை தாமதம் நீங்கும். மனக்குழப்பம் நீங்கித் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.  மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவன் மனைவிக்குள் மனவருத்தம் நீங்கும். வீடு, வாகனங்களுக்கான செலவு கூடும். தொழில், வியாபாரத்தில் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். பயணத்தால் சாதகம் கிடைக்கும். உத்தியோகத்தில் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும்.

பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது.  புதிய பொறுப்புகள் சுமையாக வரும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். கலைத் துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும். அரசியல்வாதிகளுக்கு மற்றவர்களால் மனக்கஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு, கவனத் தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களைப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: ஆரஞ்சு, நீலம்

எண்கள்: 5, 7, 8

பரிகாரம்: அங்காரகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்குவாதங்கள் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். நண்பர்களுடன் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விடுதல் காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் அதிருப்தி மனநிலை இருக்கும். பயணத்தால் சாதகம் கிடைக்கும். கடிதப் போக்குவரத்து நன்மை தரும்.  தொழில், வியாபாரத்தில் லாபம் குறையாமல் இருக்கும். உத்தியோகத்தில் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றைச் சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாகப் பயணம் செல்ல வேண்டி வரலாம்.

அக்கம்பக்கத்தவரிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு காரிய வெற்றி கிடைக்கும்.  கலைத் துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக பயணம் செல்லலாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்

எண்கள்: 2, 6

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும். மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப பிரச்சினை தீரும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் கஷ்டம் நீங்கிச் சுகம் உண்டாகும். பணவரவு கூடும். எதிர்ப்புகள் மறையும். பகைபாராட்டியவர்கள் நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் திட்டமிட்டபடிச் சிறப்பாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, வீண் அலைச்சல்  குறையும். எதிர்பார்த்த அதிகாரம், அந்தஸ்து கிடைக்கும்.

சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.  குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பெண்களது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் அகலும். கலைத் துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.  சாதுரியமான பேச்சினால் காரிய வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 3, 5

பரிகாரம்: கருமாரியம்மனை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லாவகையிலும் திருப்தி அளிக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை.  எதிர்பாலித்தவரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடலாம். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும்.  கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதைக் கேட்டு நிதானமாகப் பேச வேண்டும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் போட்டியைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு, எந்த முயற்சியிலும்  சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். கலைத் துறையினருக்கு, சக கலைஞர்களிடம் அனுசரித்துப் போக வேண்டும். அரசியல்வாதிகளுக்கு வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.  மாணவர்களுக்கு, கல்வி பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை

எண்கள்: 2, 5

பரிகாரம்: அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் நீங்கள் பொறுமையைக் கடைபிடித்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கோபத்தைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்ல வேண்டும். ஆடம்பரச் செலவுகள் ஏற்படும். வாகனச் செலவு உண்டாகலாம். பயணசுகம் உண்டு. தொழில், வியாபாரம் சற்று நிதானமாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதலாகப்  பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சில  திட்டங்களை ஆலோசிப்பீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்துக்குப் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். மாணவர்கள் கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்களை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: நந்தீஸ்வரரையும், சிவனையும் வணங்க எல்லா இடையூறும் விலகும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யத் தயங்கும் வேலையைச்  செய்து முடித்து பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். எண்ணிய செயல்களைச் செய்து காரிய வெற்றி காண்பீர்கள்.  நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனஇறுக்கம் இருக்கும். குடும்பத்தினரின் முயற்சிகளுக்கு  உறுதுணையாக இருப்பீர்கள். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரலாம். கலைத் துறையினருக்கு எதிர்பாராத நல்ல  திருப்பங்கள் ஏற்படும். சந்தோஷம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை, அந்தஸ்து உயரும். மாணவர்களுக்கு  நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்,

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close