[X] Close

வார ராசிபலன் மார்ச் 28 முதல் ஏப்ரல் 03 வரை (துலாம் முதல் மீனம் வரை)


28-03

  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 11:13 am
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சினால் எதையும் செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். பிள்ளைகள் தொடர்பாக கவலை உண்டாகும்.  தொழில், வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் நீங்கும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும்.

உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாகப் பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். பெண்களுக்கு  சமையல் செய்யும்போது கவனம் தேவை. எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. கலைத் துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை  அதிகரிக்கும். பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை  பயன்படுத்தும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: நவக்கிரகங்களை வணங்க குடும்ப பிரச்சினை தீரும். காரியத் தடை விலகும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம்  எடுத்துக் கொண்ட முயற்சிகளில் காரியத் தடை, தாமதம் ஏற்படலாம். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படும்.  வீண்பயம் ஏற்படும். ஏற்கெனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகை இருக்கும். அவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.  அக்கம்பக்கத்தவருடன் பேசும் போது கவனம் தேவை. பெண்கள் திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். கலைத் துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகள் தாங்கள்  அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான முயற்சிகள் தாமதமாக நடக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்

எண்கள்: 2, 9

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட காரிய தடை தாமதம் நீங்கும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் பகை நீங்கும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும்.  நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் கை கொடுப்பார்கள். சஞ்சலம் தீரும். தர்ம சிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.

குடும்பத்தில் திடீர்  கருத்து வேற்றுமை ஏற்படலாம். பெண்கள் அடுத்தவர்களுக்கு  உதவிகள் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். கலைத் துறையினருக்கு சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகள் தங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களைச் செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். மாணவர்கள், கல்வி பற்றிய கவலையைத் தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: முன்னோர்களை வணங்கி வர மனஅமைதி உண்டாகும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.  மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான தடைகள் நீங்கும். மனசஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள்  மகிழ்ச்சி  நீடிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாகப் பயணங்கள் செல்லலாம்.

போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். பெண்களுக்கு புத்திசாதுரியம் அதிகரிக்கும். பிரச்சினைகள் குறையும். கலைத் துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, கோபமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன்  வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு, கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: விநாயகப் பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க காரிய தடைகள் விலகி அனுகூலமான பலன் உண்டாகும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் சோம்பலை ஒதுக்கி விடுவது உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். மன உறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் நீங்கும். உடல்  ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்களால் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டுக்குத் தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

குடும்பத்திலிருப்பவர்களின் செய்கைகள், உங்களது கோபத்தைத் தூண்டுவதாக இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல்  கவனம் தேவை. பெண்களுக்கு, எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்கும் மன உறுதி ஏற்படும். கலைத்துறையினருக்கு சாதுரியமான பேச்சினால் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை

எண்கள்: 2, 6

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும் உடல் ஆரோக்கியத்தைத் தரும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். தைரியம் அதிகரிக்கும்.  ஜீரணக் கோளாறுகள்  ஏற்படலாம். உடல்சோர்வு  உண்டாகும். பணம் பலவழிகளிலும் செலவாகும். காரிய தாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும்  கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக்கவலை நீங்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம்.  நண்பர்களால் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும். தொழில், வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம்.

சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாகச்  செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் தீரும். குழப்பங்கள் நீங்கும். பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். கலைத் துறையினருக்கு மனத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு, செலவைக் குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையைக் காட்டாமல் இருப்பது நன்மை தரும்.  மாணவர்கள் பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியைத் தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3

பரிகாரம்: குரு பகவானை முல்லை மலர் சாற்றி, நெய்தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close