[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 08:45 am
  • அ+ அ-

மேஷம்: தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் மளமளவென்று முடியும். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். மனைவிவழி உறவினர்களால் நன்மையுண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

ரிஷபம்: சில காரியங்களைப் போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: மனநிறைவுடன் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு திருப்தி தரும்.

கடகம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். நட்பு வட்டம் விரியும். கடன் பிரச்சினையைத் தீர்க்க மாற்றுவழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

சிம்மம்: பிரியமானவர்களை எதிர்பாராது சந்திப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். திடீர் பயணம் ஏற்படலாம்.

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாகச் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு மறையும். பணப்பற்றாக்குறை நீங்கும்.

துலாம்: மனதில் பட்டதைப் பளிச்சென்று பேசுவீர்கள். விருந்தினர், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். பணவரவு உண்டு.

விருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவது வருத்தத்தை ஏற்படுத்தும். வெளிவட்டாரத்தில் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல்நிலை சீராக இருக்கும். நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள் திரும்ப வருவார்கள். கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும்.

கும்பம்: திட்டமிட்டக் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளைப் பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்: வீண்செலவுகளைத் தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சி செய்வீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close