[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 08:39 am
  • அ+ அ-

மேஷம்: அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு காணப்படும் செரிமானக் கோளாறு வந்து செல்லும். மாலை முதல் மகிழ்ச்சிகரமான சூழல் ஏற்படும்.

ரிஷபம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பொறுப்பு, பதவி தேடி வரும். உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். முக்கிய அலுவல்களில் எச்சரிக்கை தேவை.

மிதுனம்: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். பெரிய பதவிக்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். திடீர் பயணம் உண்டு.

கடகம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்: எதையும் சாதித்துவிடலாம் என்ற தைரியம் வரும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். பிரபலங்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கன்னி: உங்கள் கை ஓங்கும். மனஉறுதி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள், பொதுவிழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

துலாம்: தடைகள் பல வந்தாலும் தளராமல் சாதிக்க முற்படுவீர்கள். எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். கோயில் விசேஷங்களை முன்னின்று வெற்றிகரமாக நடத்துவீர்கள்.

விருச்சிகம்: உங்கள் திறமை மீது உங்களுக்கே சந்தேகம் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது நல்லது.

தனுசு: மனஇறுக்கம் வந்து செல்லும். நீண்டதூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வழக்கு தொடர்பான பிரச்சினைகளில் வழக்கறிஞரை கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்காதீர்கள்.

மகரம்: எதிர்ப்புகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். பணவரவு உண்டு. பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நண்பர்களாவார்கள். வீடு கட்ட வரைபட அனுமதி கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு.

மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தடைபட்டிருந்த வீடு கட்டும் வேலையை மீண்டும் தொடங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. திடீர் பயணம் ஏற்படலாம். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close