[X] Close

தேர்தல் களம் 2019: மத்திய பிரதேசம்: பாஜகவை அசைத்து பார்த்த காங்கிரஸ்


2019

  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 11:02 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 25 : இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே! 

விபரீத ராஜ யோகத்தில் இப்போது எட்டாமிடம் விபரீதம் ஆகும் போது என்ன பலன் தரும் என்பதைப் பார்ப்போம்.

இந்த எட்டாமிடம் மிக முக்கியமானது. ஆயுள் ஸ்தானம் என்பதற்காக மட்டுமல்ல, “மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்”  எனும் குறள் உரைக்கும் “மானம்” இந்த எட்டாம் இடமே.  

அதுமட்டுமல்ல. கண்டம் என்னும் ஆயுள் அவஸ்தையையும் இந்த இடமே காட்டும்.

இன்னும் விபரம் இருக்கிறது பார்ப்போம்.

இந்த எட்டாமிடம் விபரீதமாக வேலை செய்யும்போது, ஆயுள் பற்றிய பயம் தேவையில்லை.  

வாழ்வில் பெருந்துயரம்... அவமானம்! இந்த அவமானம் ஒரு மனிதனுக்கு எப்போது, எப்படி ஏற்படும்...? நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கும் மனிதர் மேல் அவதூறுகளை உண்மைபோல் பரப்பப்படும் போது தன்மானமானது காயப்பட்டு அவமானமாக உணருவோம்.

எதிர் கொள்ள முடியாதவர்கள், போராட வலிமை இல்லாதவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே வழி ... தற்கொலை. 

ஆனால் விபரீதமாக கிரகம் வேலை செய்யும் போது, இந்த அவமானம் தானாக துடைக்கப்பட்டு, அதற்கு கைமாறாக பெரும் யோகத்தை பரிசாகப் பெற்றுத்தரும்,

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் இதற்கு உதாரணம்.  அவர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டு அவமானத்தின் உச்சத்திற்கு சென்று, தன்னை நிரபராதி என நிரூபித்தார்.

இந்த அவமானகரமான வழக்கை எதிர்கொண்டு வெற்றி அடைந்ததும் அவருக்கு நஷ்ட ஈடாக பெரும் பணம் தரப்பட்டதும், பத்ம பூஷன் விருது அளித்து கௌரவப்படுத்தியதும் நீங்கள் அறிவீர்கள். 

இதுதான் விபரீத ராஜ யோகம். எதனால் அவமானம் ஏற்படுகிறதோ அதன்மூலமே பெரும் யோகத்தை அடையச் செய்யும்.  

இது மாதிரிதான் யோகம் உடையவர் வாழ்விலும் சில பாதிப்புகள் வரலாம். அதை பெரிதாகக் கருதாமல் இயல்பாக இருந்தாலே அந்த பிரச்சினை லாபம் தரும் யோகமாக மாறும்.

இதனால்தான் திடீர் அதிர்ஷ்டம், புதையல், லாட்டரி, இன்சூரன்ஸ் தொகை இப்படி உழைப்பில்லாத வருமானத்தையும் இந்த எட்டாமிடம் சுட்டிக் காட்டும்.

காரணம் எட்டாமிடம் "அமைதியான செயல்பாடு" என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இது எப்படி தெரியுமா? "வாயை மூடி பேசவும், " " சத்தமில்லாமல் கை தட்டவும்" போன்ற வகையைச் சேர்ந்ததுதான் இதுவும்!

செயல் நடந்து கொண்டு இருக்கும். ஆனால் அமைதியாக நடக்கும்! ஆர்ப்பாட்டமில்லாமல் நடக்கும்.

அடுத்து கண்டம் என்னும் விபத்து பாதிப்பு. முக்கியமான தகவல் ஒன்று... உடல் உறுப்புகளை இழப்பது குறித்தும் இந்த எட்டாமிடம் தான் காட்டும்.

சரி , கண்டம் எப்படியானது என பார்க்கலாம்.

உங்கள் ஜாதகத்தில் எட்டாமிடம் எந்த வீடு என பாருங்கள். அதன் தன்மை என்ன என்று பாருங்கள். அந்த வீடு குறிக்கும் குணத்திற்கு ஏற்ற மாதிரியான கண்டம்தான் வரும் என்பதே ஜோதிடக் கணக்கு.

உதாரணமாக உங்கள் ஜாதகத்தில் 8ம் இடம் மேஷம் என்று வைத்துக்  கொள்வோம்...

மேஷம் - நெருப்பு வீடு ஆக நெருப்பினால் கண்டம்.

ஒரு அட்டவணை தருகிறேன். உங்கள் ஜாதகத்தில் 8-ம் இடம் எது என அறிந்து கொள்ள வசதியாக இந்த அட்டவணையைப் பாருங்கள்.

மேஷம், சிம்மம், தனுசு ------ நெருப்பு

ரிஷபம், கன்னி, மகரம் ------- நிலம்

மிதுனம், துலாம், கும்பம் ------ காற்று

கடகம் ,விருச்சிகம், மீனம் ------- நீர்

உங்கள் ஜாதகத்தில் 8 ம் இடம் நெருப்பு என்றால், எளிதில் தீப்பற்றும் இடங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இடி மின்னல் தாக்க முடியாத இடத்தில் இருக்க வேண்டும். புகை பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் நெருப்பு தானம் தருவார்கள். அதெல்லாம் கூடாது,

8 ம் இடம் நிலம் என்றால்,  பயணங்களில் கவனம் வேண்டும். இரவு நேர பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அல்லது கூடுதல் கவனத்துடன்  இருக்க வேண்டும். சமவெளியில் நடக்கும் போது கூட மிக மிக கவனம் தேவை. ஏதோ அதிகப்படியாக சொல்கிறேன் என நினைக்கலாம்.  நன்றாக கவனித்தால் இவர்கள் நடக்கும் போது கூட எதிலாவது இடித்துக் கொண்டு தன் காலைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார்கள். உண்மையா என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே உணருவீர்கள்.

8ம் இடம் காற்று என்றால் - விஷ வாயுக்கள் , ரசாயனங்கள் உள்ள இடங்களுக்குச் செல்லக் கூடாது. அவ்வளவு ஏன் கழிவறையில் ஆசிட் ஊற்றும்  வேலையைக் கூட செய்யக் கூடாது. புயல் வரும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  இவர்கள்தான் செல்போனில் வீடியோ எடுத்து சுலபமாக சிக்கிக் கொள்பவர்கள்.

8ம் இடம் நீர் ராசி என்றால் -- . தண்ணீரில் கண்டம், பெரிதாக விளக்கம் தேவைப்படாது என நம்புகிறேன். நண்பர்களோடு சேர்ந்து உற்சாக மிகுதியால் கடல், ஏரி குளம் என குளிக்கிறோம் என செல்லாதீர்கள், புதிய இடங்களுக்குச் செல்லும் போது தண்ணீரைக் காய்ச்சி குடியுங்கள். இவர்கள்தான் தண்ணீரால் அதிகம் உடல் நோய்களைச் சுமப்பவர்கள். எனவே தண்ணீர் தானே என அலட்சியமாக இருக்காமல் கவனமாக இருங்கள்.

இதெல்லாம் சரி, விபரீத யோகம் இருப்பவர்களுக்கும் இது பொருந்துமா?

விபரீத யோகம் உள்ளவர்களுக்கு அச்சம் தேவையில்லை, நிச்சயமாக எந்த பாதிப்பும், கண்டமும் வராது.

எச்சரிக்கை உணர்வும், கவனமும் நல்லதுதானே. இது விழிப்பு உணர்வு தொடர் என்பதை மறந்துவிடாதீர்கள்.

- தெளிவோம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close