[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 08:30 am
  • அ+ அ-

மேஷம்: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். சிலவற்றுக்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.

ரிஷபம்: மனக்குழப்பங்கள் நீங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வேற்று மதத்தினரால் நன்மை கிட்டும். முன்கோபம், அலைச்சல் விலகும். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி அடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு அதிகரிக்கும்.

கடகம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.

சிம்மம்: எதிர்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

கன்னி: எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். பிரிய மானவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். குடும்ப வரு மானத்தை உயர்த்துவீர்கள். சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும்.

துலாம்: விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமுக நிலை காணப்படும்.

விருச்சிகம்: உறவினர்கள், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப் படுவீர்கள். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்.

தனுசு: பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும்.

மகரம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கும்பம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மீனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்ய நினைப்பீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். குடும்பத்துடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டு.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close