[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 09:03 am
  • அ+ அ-

மேஷம்: சகோதர உறவுகளுடன் மனவருத்தம் வந்து நீங்கும். பணப் பற்றாக்குறை ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மின் சாதனங்களை கவனமாக கையாளுங்கள்.
**
ரிஷபம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், உறுதியுடன் எதிர்கொள்வீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். பேச்சில் பொறுமை தேவை.
**
மிதுனம்: வழக்குகளில் நல்ல திருப்பம் உண்டாகும். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும்.
**
கடகம்: உங்கள் கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொறுப்புகள் வந்துசேரும்.
**
சிம்மம்: சோர்வு, களைப்பு நீங்கி, உற்சாகத்துடன் புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும். எக்காரியத்திலும் நிதானம் அவசியம்.
**
கன்னி: தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
**
துலாம்: மகிழ்ச்சி, உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதியவர்களால் ஆதாயம் உண்டு. பல வகையிலும் பணவரவு, பொருள் வரவு உண்டு.
**
விருச்சிகம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தரவேண்டாம். சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.
**
தனுசு: அரசாங்கத்தால் ஆதாயம், லாபம் உண்டு. திடீர் பயணங்கள் வரும். புது வேலையில் சென்று அமர்வீர்கள். நெருங்கிய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
**
மகரம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நண்பர்களுடன் இருந்த பகை நீங்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டாகும்.
**
கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பணவரவு உண்டு. எதிர்ப்பு, ஏமாற்றத்தை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள்.
**
மீனம்: நீண்ட கால பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close