[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 08:20 am
  • அ+ அ-

மேஷம்: சகோதரர் வகையில் குழப்பம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு எதிர்பாராமல் கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.

மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். திடீர் பயணம் உண்டு.

கடகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் அனுபவ முதிர்ச்சி தெரியும். சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு மேலோங்கும். நீண்டநாள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

துலாம்: சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர்கள், நண்பர்களை அநாவசியமாகப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வாயு பதார்த்தங்களைத் தவிருங்கள்.

தனுசு: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன ஆவணங்கள் கிடைக்கும். சுபச் செலவு உண்டு.

மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

மீனம்: பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைக்காதீர்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close