[X] Close

'வீடு தமிழ்நாடு; வாசப்படியோ கேரளா!'- விநோத எல்லை கிராமம்


  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 19:29 pm
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2- 24 :  இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

 விபரீத ராஜ யோகம் குறித்துப் பார்த்துவருகிறோம். இதுவரை 6ம் இடமும், 8ம் இடமும் என்ன மாதிரியான பிரச்சினைகளை... பலன்களை தரும் என பார்த்தோம்.  

இப்போது இது விபரீதமாக மாறினால் என்ன பலன் தரும்?

சமூக விரோதச் செயல்களை செய்யும் ஒருவன், சுதந்திரமாக ஊர் சுற்ற விட்டால் எவ்வளவு கொடுஞ்செயல்கள் செய்வான்? 

அதேசமயம் அவனை சிறை என்னும் மறைவாக ஓரிடத்தில்  அடைத்து வைத்தால்அவனால் எந்த கெடு விஷயங்களும் செய்ய முடியாதல்லவா? இதுதான் “கெட்டவன் கெட்டுப்போக கிட்டிடும் ராஜ யோகம்” என்றார்கள்.

இப்படி 6ம் அதிபதி அல்லது 8ம் அதிபதி இடம் மாறி மறைவு பெற ராஜ யோகங்கள் நம்மை நோக்கி வரும். 

என்ன மாதிரியான பலன் அதாவது யோகம் தரும் என்பதை பார்க்கலாம்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமானது நிம்மதி. அது எப்படிப்பட்ட நிம்மதி? ’பட்டினியாகக் கூட படுக்கலாம். ஆனால் கடனோடு படுக்கக்கூடாது” என்பது நம்மில் பலருக்கும் இருக்கும் வைராக்கியம். ஆசை. விருப்பம்.

இந்த விபரீத யோகம் இருப்பவர்கள்... தாராளமாக கடன் வாங்கலாம். கடன் வாங்கி தொழில் தொடங்கலாம். வீட்டுத்தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். இன்னும் சொல்லப்போனால் கடன் வாங்கி வாங்கியே தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளலாம்.

’என்ன சார், கடனை நினைச்சாலே, தினமும் தூக்கமே  வரமாட்டேங்குது. நீங்க என்னன்னா கடன் வாங்கச் சொல்றீங்களே?’ என்று கேட்கிறீர்கள்தானே!

கடன் வாங்குவதில் தவறில்லை. அதை முறையாக முதலீடு செய்து லாபம் பெருக்கும் வழிவகைகளை அறிந்து கொள்ளவேண்டும்.

ஒருசிலர் கடன் வாங்கியதில் ஊதாரித்தனமாக செலவு செய்தல், அல்லது கடனை வாங்கிய அன்றே மறந்து ‘எதுக்கு திருப்பித் தரணும்?’ என நினைப்பவர்கள் கடன் பெற தகுதியே இல்லாதவர்கள்.

ஆனால் விபரீத யோகம் உடையவர்கள், நிச்சயம் வாங்கிய கடனை நல்லவிதமாக முதலீடு செய்வார்கள். லாபம் பெறுவார்கள். வசதிகளை பெருக்கிக்கொள்வார்கள். 

இன்றைக்கு பெரிய பெரிய நிறுவனங்களாக, பல்லாயிரம் பேருக்கு வேலை வழங்கிக்கொண்டிருக்கின்ற, உலக அரங்கில் சர்வதேச போட்டியாளர்களாக இருக்கின்ற நிறுவனங்கள் அனைத்தும் கடன் வாங்கியே முன்னேறியவர்கள்தான், முன்னேறியதுதான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

உங்களுக்கும் அதைத்தான் சொல்கிறேன். கடன் தவறில்லை. அதை நாம் என்ன செய்கிறோம் என்பதை பொருத்தே நம் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது.

அடுத்து நோய்த் தாக்கம், “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது உண்மைதானே. கோடிகோடியாக பணம் இருந்தும் தீராத நோய் இருந்துவிட்டால், அத்தனை செல்வமெல்லாம் இருந்தும் வீண்தான். வேஸ்ட்டுதான்!

விபரீத யோகம் உடையவர்கள் நோயின் தாக்கம் என்பதே இல்லாதவர்கள். காய்ச்சல் என்று மருத்துவரிடம் போவார்கள். சோதித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. அதேபோல் உடலில் பெரிய பாதிப்பாக இருக்குமோ  என  பயந்து, அனைத்து சோதனைகளும் எடுத்துப்பார்ப்பார்கள். ’ஒண்ணுமே இல்லீங்க. எல்லாமே நார்மலாத்தான் இருக்கு. நல்லாத்தான் இருக்கு. யூ ஆர் ஆல்ரைட்” என்று மருத்துவர் வழியனுப்பிவைப்பார்.

உடனே, ’ஐயா எனக்கு ஷூகர் இருக்குதே’ என்று கேட்காதீர்கள்.  டயாபடிக் என்பது அதாவது சர்க்கரைக் குறைவு அல்லது அதிகம் என்பது நோயல்ல அது குறைபாடு மட்டுமே.

ஆக நோய் பயம் தேவையே இல்லை.

அதே சமயம் (கடின)உழைப்பையும் 6ம் இடம் காட்டும். உழைப்பு என்பது உடலுழைப்பு மட்டுமல்ல மூளை உழைப்பும் உழைப்புதான்.

உழைப்பு அதிகமாகும்போது, உடலில் தேய்மானம் உண்டாகும் என்பது இயற்கையே. ஆகவே, உழைத்து, உழைத்ததால் பணம் சேரச்சேர நோயும் அதிகமாகும் என்பது நிதர்சனம். 

அப்படியானால் நோய் பயம் தேவையில்லை என்று சொன்னீர்கள், இப்போது நோய் வரும் என்றும் சொல்கிறீர்கள் என்று கேட்பது புரிகிறது.  

அதாவது பணம் தேடி ஓடுகின்ற ஓட்டத்தில் உடலைப் பற்றிய கவனம் குறைகிறது. அதனால் உடலில் சின்னச்சின்ன பிரச்சினைகள் லேசாக எட்டிப்பார்க்கும்.  

இந்தத் தொடரின் நோக்கம் விழிப்பு உணர்வை உண்டாக்குவதற்குத்தான் என்பதை மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.  

பணம் தேவைதான், அதே சமயம் உடல் நலத்திலும் கவனம்செலுத்துங்கள் என்றுதான் சொல்கிறேன். 

அடுத்து எதிரிகள் அல்லது எதிர்ப்புகள் பற்றி பார்ப்போம். 

இந்த யோகம் உடையவர்கள் எதிர்ப்புகளையும், மறைமுக எதிரிகளையும்  அதிக அளவில் கொண்டிருப்பார்கள். ஆனால் இவர்களால் உங்களை வெல்லமுடியாது. அதுமட்டுமல்ல... இந்த எதிரிகளாலேயே உங்களுக்கு லாபமும் உண்டாகும்.

அட... இது நல்லாருக்கே... அது எப்படி?

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்களே... அதுபோலத்தான்!

உங்கள் சக ஊழியர்கள் இல்லாததும் பொல்லாததுமாக உங்கள் உயரதிகாரியிடம் உங்களைப் பற்றி போட்டுக் கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம், அந்த உயரதிகாரி உங்களை நன்கு அறிந்து வைத்திருப்பார். எனவே உங்கள் எதிரியின் கருத்துக்களை காது கொடுத்தும் கேட்க மாட்டார். அதுமட்டுமல்ல அந்த அதிகாரி வேண்டுமென்றே உங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்கி, உங்கள் எதிரியின் முகத்தில் கரியைப் பூசி விடுவார்.

எனவே உங்கள் வளர்ச்சி உங்கள் கையில் இருப்பதை விட, உங்கள் எதிரிகளின் கையில்தான் உள்ளது. எனவே நீங்கள் எல்லாம் அறிந்திருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் உங்கள் எதிரியிடம் நட்புடனே இருங்கள்.  

“உங்கள் எதிரியே உங்களின் உற்ற நண்பன்” என்பதை மறவாதீர்கள், 

சமீபத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு நான் கொடுத்த அறிவுரை இதுதான்.

அதாவது பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே பதவி உயர்வு பெற்றவர், அவரிடம் நான் உங்கள் எதிர்ப்பாளருக்கு இனிப்பு வாங்கிக்கொடுங்கள் என்று சொன்னேன்.

ஆம்... உதவியவர்களுக்கு  நாம் ஏதாவது செய்யத்தானே வேண்டும்! 

இன்னும் இருக்கிறது. தொடர்ந்து பார்ப்போம்...

- தெளிவோம்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close