[X] Close

பங்குனி உத்திரம்: குலதெய்வ வழிபாடு மறக்காதீங்க! - குலம் தழைக்கும்; கடன் தீரும்; கவலைகள் பறந்தோடும்!


panguni-utthiram

  • வி.ராம்ஜி
  • Posted: 21 Mar, 2019 10:42 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

பங்குனி உத்திர நாளான இன்று, குலதெய்வத்தை நினைத்து வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். குலம் தழைக்கும். கடன் முதலான தொல்லைகள் தீரும். கவலைகள் அனைத்தும் பறந்தோடும் என்பது ஐதீகம்.

பங்குனி உத்திர நாள் என்பது தெய்வங்கள் பலருக்கும் திருமணம் நிகழ்ந்த அற்புத நன்னாள். இந்தநாளில், சிவ வழிபாடு செய்வதும் முருகப்பெருமானை தரிசிப்பதும்  பெருமாளை ஸேவிப்பதும் ஐயப்ப சுவாமியை தரிசித்து வேண்டுவதும்  மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கின்றன ஞானநூல்கள்.

சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, முருக வழிபாடு, ஐயப்ப வழிபாடு அல்லது சாஸ்தா வழிபாடு என்பது போல், பங்குனி உத்திர நன்னாளில், குலதெய்வப் பிரார்த்தனையும் சக்தியும் சாந்நித்யமும் கொண்டது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்று பங்குனி உத்திரத் திருநாள். இந்தநாளில், குலதெய்வப் பிரார்த்தனை சிறப்பானது. குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழக்கப்படி வணங்குங்கள். பொங்கல் படையலிட்டு வேண்டிக்கொள்ளலாம். அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.

மேலும் மிக முக்கியமாக, வீட்டில் பூஜையறையிலும் நிலைவாசற்படியிலும் விளக்கேற்றுங்கள். குலதெய்வப் படம் இருந்தால், பூக்களால் அலங்கரித்து, தீபதூபம் காட்டி ஆராதனை செய்யுங்கள்.

மாலையில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, விளக்கேற்றி, குலதெய்வத்துக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி என ஏதேனும் இனிப்புகள் படைத்து, நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் குலம் தழைக்கும். குடும்பத்தில் நிம்மதி தவழும். கடன் முதலான தொல்லைகள் அனைத்தும் நீங்கும். கவலைகள் யாவும் பறந்தோடும்.  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close