[X] Close

ஆலோசனைக் கூட்டத்தில் தகராறு: தேமுதிக நகரச் செயலாளர் கைது


  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 08:08 am
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் திறன் அதிகரிக்கும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளைச் சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் நன்றாகச் செல்லும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் கவனமாக இருக்க வேண்டும். பதவி உயர்வு, நிலுவைப் பணம் வந்து சேரும். குடும்பத்தில்  குழப்பங்கள் அகலும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்களிடம் நிதானமாகப் பேச வேண்டும். பெண்கள் எதிலும் கூடுதலான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கலைத் துறையினருக்கு, நீங்கள் விரும்பியபடி பணியாற்றலாம். தொழிலில் போட்டி நீங்கும். அரசியல்வாதிகளுக்கு, உடனிருப்பவர்கள் அனுசரித்துச் செல்வார்கள். மாணவர்களுக்கு, சக மாணவர்களுடன் மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாகப் படிப்பீர்கள்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி. l திசைகள்: கிழக்கு, வடகிழக்கு. l நிறங்கள்: மஞ்சள், சிவப்பு. l எண்கள்: 1, 3, 9. l பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர எல்லாப் பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் பணத்தேவை அதிகரிக்கும். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை நீங்கும். தொழில், வியாபாரத்தில் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தினரால் ஆயாசம் உண்டாகலாம். கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்துச் சொல்லுங்கள். குழந்தைகளின் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டும். பெண்களுக்கு, மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை வரும். கலைத் துறையினருக்கு, வெளியூர்ப் பயணத்தால் அலைச்சல் உண்டாகலாம். அரசியல்வாதிகள் மற்றவர்களுக்கு உதவும்போது ஆலோசிக்க  வேண்டும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். மாணவர்களுக்கு, பாடங்களை மிகவும் கவனமாகப் படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி. l திசைகள்: தெற்கு, தென்மேற்கு. l நிறங்கள்: வெள்ளை. l எண்கள்: 2, 3, 6. l பரிகாரம்: அஷ்டலட்சுமி களையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணக்கஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் முக்கியஸ்தர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவு இருக்கும். இடமாற்றம், வெளியூர்ப் பயணங்கள், அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். அரசுக் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். யாரிடமும் விரோதத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை காணப்படும். பெண்களுக்கு, எந்தச் செயலையும் தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, வீண் ஆசைகள் மனத்தில் தோன்றும். அரசியல்வாதிகளுக்கு, காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். மாணவர்களுக்கு, கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன். l திசைகள்: மேற்கு, தென்மேற்கு. l நிறங்கள்: பச்சை, மஞ்சள். l எண்கள்: 5, 6. l பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கிவர முன்ஜென்மப் பாவம் நீங்கும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். வாகனங்களை ஓட்டிச் செல்லும் போதும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் மந்தமாகக் காணப்பட்டாலும் வருவாய் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு, எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்குக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு, வீண் மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு, உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு, கவனத்தைச் சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி. l திசைகள்: வடக்கு, வடமேற்கு. l நிறங்கள்: வெள்ளை, மஞ்சள். l எண்கள்: 2, 3, 6. l பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் புத்தி சாதுரியத்துடன் காரியங்களைச் செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவு இருக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைகளைச் சமாளிப்பீர்கள். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்குவதில் சுணக்க நிலை மாறும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான போக்கு காணப்படும். வியாபாரப் பயணங்களைத் திட்டமிட்டபடி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பதற்றம் நீங்கும். குடும்பத்தினரால் நிம்மதிக் குறைவு உண்டாகலாம். பெண்கள் வாக்குவாதங்களையும் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களையும் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, எல்லோரையும் எளிதில் வசீகரிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனத்துடன் படிப்பது வெற்றியைத் தரும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி. l திசைகள்: கிழக்கு, தெற்கு. l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள். l எண்கள்: 1, 3, 9. l பரிகாரம்: சரபேஸ்வரரை வணங்க காரியத் தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ஏற்ற இறக்கங்களைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றுவீர்கள். பணவரவு இருக்கும். சாமர்த்தியமான பேச்சு, இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையும் உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து நிம்மதி அடைவார்கள். குடும்பத்தினரிடம் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு, காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக எல்லாம் நடந்து முடியும். கலைத் துறையினருக்கு, ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான விஷயங்களில் போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி. l திசைகள்: வடக்கு, வடமேற்கு. l நிறங்கள்: சிவப்பு, பச்சை. l எண்கள்: 1, 5, 6. l பரிகாரம்: லட்சுமி நாராயணப் பெருமாளைத் தரிசித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close