[X] Close

‘2.0’ படத்தில் அக்‌ஷய் குமாருக்காக இயக்குநர் மகேந்திரன் டப்பிங் பேசியதைப் பயன்படுத்த முடியவில்லை: இயக்குநர் ஷங்கர்


2-0

  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 17:21 pm
  • அ+ அ-

மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்குத் தள்ளிப்போன திருமண முயற்சிகள் கூடி வரும். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றியுண்டு.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அடிமனதில் நிலவிய தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.

மிதுனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை துணிச்சலுடன் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி ஏற்படும் கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். புதிய முயற்சிகளில் இறங்குவதற்கு முன்பு குடும்பத்தினரின் கருத்துகளைக் கேட்பது நல்லது.

கன்னி: சுபச்செலவுகள் வரும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். இடவசதி, காற்றோட்டமுள்ள வீட்டுக்கு குடிபுகுவீர்கள். பண வரவு திருப்தி தரும்.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி, பெருமை உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்: திடீர் பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சகோதரர் வகையில் உதவியுண்டு. ஊர் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். 

தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். கணவன் - மனைவி இடையே அன்பு மேலோங்கும்.

மகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருட்செலவு வரக்கூடும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அளவாகப் பழகுவது நல்லது.

கும்பம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close