[X] Close

சொந்த தொகுதி, வாரிசு தொகுதியில் ‘டேரா’ போட்ட தலைவர்கள்- ‘கவனிக்க ஆளில்லை’ வேட்பாளர்கள் கவலை


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 08:13 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 23: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

விபரீத ராஜயோகம் என்றால் என்ன? அது, என்ன பலன்களையெல்லாம் தரும்? எப்போது தரும்? முதலான தகவல்களை பார்க்கலாமா?

முதலில் விபரீதம் என்றால் என்ன? ஒரு செயல் தன் இயல்பு நிலையை விடுத்து எதிர்மறையான செயலைச் செய்தால் அது விபரீதம். உதாரணமாக,  கோடையில் வெயில் என்பது சகஜம். இயல்பு. ஆனால் கோடை முழுவதும் மழை பொழிந்து குளிர்ச்சியைத் தந்தால்...  அப்படித்தான் இதுவும்!

அது இயற்கை முரண்தான் என்றாலும், நமக்கு வெயிலில் இருந்து தப்பிப்பது பெரு மகிழ்ச்சியைத் தருகிறது அல்லவா! இதுதான் யோகம்.

அது மாதிரிதான், ஒரு கிரகம், தான் என்ன பலன்களைத் தர வேண்டுமோ அதைத் தராமல், அதற்கு மாறான அதாவது இயல்புக்கு மாறான பலன்களைத் தருவது விபரீதம் ஆகும்.

சரி... அந்த விபரீதம்; ராஜயோகமாக மாறுவது எப்படி? 

நாம் மேலே சொன்ன கருத்து ஒரு கிரகத்திற்கு மட்டுமே, இப்போது இரண்டு கிரகங்கள். இதுபோல் இயல்பு நிலை மாறி பலன் தர ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

இரண்டு கிரகமும் போட்டிபோட்டுக் கொண்டு ஓயாமல் பலன்களை வாரிவாரித் தந்தால் அதுவே ராஜயோகம்! இரண்டு கிரகமும் தன்னிலையை மறந்ததால் விபரீத ராஜ யோகமாக பலன் தருகிறது.

ஒரு ஜாதகத்தில் 3,6,8,12 ஆகிய இடங்கள் மறைவு ஸ்தானம். இதில் 3 ம் இடம் கால் பங்குதான் மறைவு என்ற அந்தஸ்து பெறும்.

12 ம் இடம் அரை பங்கு மறைவு ஸ்தானம்.

ஆக 6ம் இடம் 8ம் இடம் இவை இரண்டும் முழு மறைவு ஸ்தானம் எனப்படும்.

எனவேதான், இந்த முழு மறைவு அதிபதிகள் பரிவர்த்தனை என்னும் இடம் மாறி அமர்வது விபரீதம் என முன்னோர்கள் குறிப்பிட்டனர்,

அப்படியானால் 3ம் இடமும்12ம் இடமும் பரிவர்த்தனை அடைந்தால் இந்த யோகம் உண்டாகாதா? என்று கேட்டால், நிச்சயம் யோகம் உண்டு. என்ன... அதன் வீரியம்... வீச்சு... குறைவாகத்தான் இருக்கும்.

ஒருவர் ஜாதகத்தில் 6 ம் அதிபதியும், 8 ம் அதிபதியும், தங்களுக்குள் இடம் மாறி அமர்ந்தால் அது விபரீத ராஜ யோகமாக பலன் தரும் என்பது புரிகிறதுதானே. ஏன் விபரீதமாக பலன் தரவேண்டும்?

அதன் விபரத்தை முதலில் அறிவோம்.

6ம் இடம் :- ஒரு மனிதனின் நோய், கடன், எதிரி, உழைப்பு, வேலை, குழந்தைகளின் எதிர்காலம் எனும் நிலை, நண்பர்கள், கூட்டாளிகள், அவ்வளவு ஏன் மனைவி/கணவன் இவர்களின் குணநலன், எண்ண ஓட்டம் இவற்றைக் காட்டுகிறது.

8ம் இடம் :- மனிதனின் ஆயுள், கண்டம், சிறை செல்லும் நிலை உண்டா? வழக்கில் வெற்றி கிடைக்குமா? அவமானங்கள் நிகழுமா? நிம்மதியான மோட்சமா? ( ஆயுள் முடிவு) அல்லது துர்நிகழ்வா? 

நண்பர்கள், பார்ட்னர்கள், மனைவி/கணவன் இவர்களால் நமக்கு நன்மையா-தீமையா என்பதெல்லாம் காட்டும் இடம்.

இந்த இடத்தில் சிறிய விளக்கம்-

திருமணத்தின் போது பொருத்தம் பார்க்கிறோம். அப்போது இந்த எட்டாம் இடத்தையும் ஜோதிடர்கள் ஆய்வு செய்வார்கள். ’செவ்வாய் இருக்கா? ராகு கேது இருக்கா?’ என்று பார்த்து தோஷத்தை மட்டும் கணக்கில் எடுப்பார்கள். உண்மையில் இந்த எட்டாமிடம் நல் வாழ்க்கைத் துணையால் நமக்கு ஏற்றம் உண்டா இல்லையா என்பதை அறிவதற்குத்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.  

புரியவில்லையா? இன்னும் ஒரு உதாரணம் சொல்கிறேன்.  

ஒரு சிலர் திருமணத்திற்கு பின் “என் பொண்டாட்டி வந்த நேரம் நான் இப்ப கோடீஸ்வரனா இருக்கேன்” என்று சொல்லுவார்கள். அதைக் காட்டும் இடம் இந்த எட்டாம் இடமே!

சரி நாம் யோகத்திற்க்குச் செல்வோம்.

இப்படி நமக்கு நோய்,கடன், ஆயுள், கண்டம், விபத்து முதலானவற்றைத் தரக்கூடிய இந்த இரண்டு இடங்களின் அதிபதிகள் “தங்களுக்குள் வீடு மாறி அமர்ந்தால்” அதுதான் விபரீத ராஜ யோகம் என்பது!

இது நம் ஜாதகத்தில் இருக்கிறதா என்பதை எப்படி அறிந்துகொள்வது?

உங்கள் ஜாதகத்தில் “ல” என குறிப்பிடப்பட்ட லக்னம் என்னும் கட்டத்தை 1 என எண்ணத்தொடங்கி, 6ம் இடம்  8ம் இடம், இந்த இரண்டு வீட்டுக்கும் யார் அதிபதி என்று பார்த்து அவர்கள் இருவரும் வீடு மாறி அமர்ந்துள்ளார்களா? என்பதையும் பார்த்தால் போதும்.

இந்தப் படம் பார்த்து அந்த வீட்டின் அதிபதிகளை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக மேஷ லக்னம் என்று எடுத்துக் கொள்வோம். இந்த லக்னத்திற்கு 6ம் இடம் கன்னி. அதன் அதிபதி புதன்.

8ம் இடம் விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்.

இப்போது புதன் விருச்சிகத்திலும், செவ்வாய் கன்னி ராசியிலும் இருந்தால். அதுதான் விபரீத ராஜயோகம்.  

நாம் மேலே 6ம் 8ம் என்ன கெடு பலன் தரும் என பார்த்தோம். இது எப்படி யோகமாக மாறுகிறது?

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

- தெளிவோம்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close