[X] Close

பிரதமர் மோடி இரும்பு மனிதர் அல்ல.. கல் மனிதர்... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 09:36 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

சோம வார பங்குனி பிரதோஷம் இன்று. எனவே, இந்தநாளில், மாலையில் நந்திகேஸ்வரருக்கும் சிவனாருக்கும் அபிஷேக, ஆராதனைகளை கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் கஷ்டங்கள் யாவும் கரைந்து விடும். துக்கங்கள் அனைத்தும் காணாமல் போகும் என்பது உறுதி.

திங்கட்கிழமையை சோம வாரம் என்பார்கள். சோமவாரம் என்பது சிவபெருமானுக்கு உரிய அற்புதமான நாள். பங்குனி மாதத்தில் வரும் சோம வாரத்தில், சிவ வழிபாடு செய்வது உன்னதமானது என்பார்கள்.

அதிலும் குறிப்பாக, சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில் பிரதோஷம் வரும் போது, மறக்காமல் சிவாலயம் சென்று தரிசித்து வணங்குவது சகல நன்மைகளையும் வளங்களையும் தந்தருளும் என்பது ஐதீகம்.

இன்று சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில், பங்குனி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷ தினத்தில், மாலையில் சிவாலயம் செல்லுங்கள். சிவனாருக்கு வில்வமும் செவ்வரளியும் சார்த்தி வழிபடுங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும் செவ்வரளியும் சார்த்தி வழிபடுங்கள். முடிந்தால், அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள்.

பங்குனிப் பிரதோஷ தரிசனம், நம் கஷ்டங்களையெல்லாம் கரைத்துவிடும். துக்கங்களையெல்லாம் போக்கிவிடும்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close