[X] Close

நன்மையின் பக்கம் வாக்காளர்கள்: இயக்குநர் கரு.பழனியப்பன் வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 09:31 am
  • அ+ அ-

மேஷம்: வெளி வட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாய் வழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும். 

ரிஷபம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும். மனைவி வழி உறவினர்களுடன் இருந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும்.

 மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர் பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் கூடும். 

கடகம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தரவேண்டாம். சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். எக்காரியத்திலும் நிதானம் அவசியம். 

சிம்மம்: அரசு, வங்கி வகையில் ஆதாயம் உண்டு. அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் வரும். விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். 

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை உண்டாகும். பல வகை யிலும் பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உடன்பிறப்புகள் பக்கபலமாக இருப்பார்கள். 

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும். 

விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். திடீர் பயணத்தால் செலவுகள் கூடும். பழைய நண்பர்கள், உறவினர்களை சந்திப்பீர்கள். 

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். புது வேலை கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. 

மகரம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன், கவுரவமும் ஒருபடி உயரும். புதிய நபர்களால் அனுகூலம் உண்டு. 

கும்பம்: உங்கள் சமயோசித புத்தியால் பல காரியங்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பித் தருவீர்கள். பேச்சு, செயலில் பொறுமை தேவை. 

மீனம்: அறிஞர்களின் நட்பு கிடைக்கும். உங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பதவி, பொறுப்புகள் தேடிவரும்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close