[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


indha-naal-ungalukku-eppadi

  • kamadenu
  • Posted: 17 Mar, 2019 08:35 am
  • அ+ அ-

மேஷம்: வீடு மாற நினைத்தவர்களுக்கு காற்றோட்டமுள்ள சுகாதாரமான வீடு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல பதில் வரும்.

ரிஷபம்: தொட்டதெல்லாம் துலங்கும். சகோதரர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பணவரவு உண்டு.

மிதுனம்: பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கடகம்: யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

சிம்மம்: பணம் ஒருபக்கம் வந்தாலும் செலவுகளும் அடுத்தடுத்து வரும். மற்றவர்களுக்காக உத்தரவாதக் கையொப்பமிட வேண்டாம். மனைவிவழி உறவினர்களால் அலைச்சல் உண்டு.

கன்னி: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி, பணம் வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு.

துலாம்: பதவிகள் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களைச் சந்திப்பீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்: மாறுபட்ட அணுகுமுறையால் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பெரிய மனிதர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

தனுசு: வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வெகுதூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கணவன் - மனைவி இடையே எதிர்பாராத வகையில் கருத்துவேறுபாடு வரக் கூடும்.

மகரம்: போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டு. சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். 

கும்பம்: பிரச்சினைகள், சிக்கல்கள், உடல்நலக் குறைவுகள் என்று வந்தாலும் எதையும் சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவீர்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

மீனம்: பிள்ளைகளால் உற்சாகமடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். திடீர் பயணம் உண்டு

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close