[X] Close

பாமகவும் விசிகவும் நேருக்கு நேர் மோதும் விழுப்புரம்: உதயசூரியனில் போட்டியிடும் வியூகம் வெல்லுமா?


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 17:23 pm
  • அ+ அ-

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் எத்தனை தடைகள் வந்தாலும் காரியங்களை முடிப்பதில் ஆர்வம் இருக்கும். எல்லாவகையிலும் நல்லதே  நடக்கும். பணவரவு அதிகரிக்கும்.எதிர்ப்புகள் விலகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். விரும்பிய காரியங்களைச் செய்து சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 

தொழில், வியாபாரத்தில் காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள்  நடக்கும். 

கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன்  கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவார்கள். 

கலைத் துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன் திசைகள்: கிழக்கு, தெற்கு நிறங்கள்: மஞ்சள், சிவப்பு எண்கள்: 3, 9 பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர எல்லா நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம்  நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது. மனத்தை உறுத்திக் கொண்டிருந்த கவலைகள் நீங்கும். எவ்வளவு  திறமையுடன் செயல்பட்டாலும் காரியத் தடங்கல்கள் இருக்கும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும்போது கவனம் தேவை. 

தொழில், வியாபாரத்தில் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில்  முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்துக்கான திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு, மனை வாங்குவதற்கான வேலைகளைத்  தொடங்குவீர்கள். 

பெண்களுக்கு, மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். 

கலைத் துறையினருக்கு பணவரவு இருக்கும். படைப்புத் திறன், உற்சாகம் காணப்படும்மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது உடைமைகளில் கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி திசைகள்: மேற்கு, வடமேற்கு நிறங்கள்: வெள்ளை, பச்சை எண்கள்: 5, 6  பரிகாரம்:  அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் உடல் உபாதை மறையும். மனக்கவலைகள் நீங்கும்.  வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. திட்டமிட்டபடி காரியங்களைச் செய்ய முடியாமல் தடங்கல்கள்  ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாகக் கிடைக்கும். குடும்பத்தில் இதமான  சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு திடீர்  செலவு உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். உங்கள் கடின உழைப்பைத் தொடர்வதனால் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு மிகவும் கவனமாகப் பாடங்களை படிப்பது முன்னேற்றத்துக்கு  உதவும். படிப்பின் நிமித்தம் வெளியூர்ப் பிரயாணங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன் திசைகள்: வடக்கு, தென்மேற்கு நிறங்கள்: வெள்ளை, பச்சை எண்கள்: 2, 5 பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர முன்ஜென்மப் பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.  வெளிவட்டாரத் தொடர்புகளில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.  

உத்தியோகத்தில் வேலைப்பளு குறைந்து மனமகிழ்ச்சியடைவார்கள். மேலதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வருகையும் நன்மையும் இருக்கும். 

கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். முயற்சிகள் நல்ல பலன் தரும்.  

கலைத்துறையினர் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.சுபகாரியங்கள் நடத்துவது பற்றிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அளிக்கும். அரசியல்வாதிகள் சிக்கன நடவடிக்கை மேற்கொள்வார்கள். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம்  காணப்படும். கஷ்டமாகத் தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன் திசைகள்: மேற்கு, வடகிழக்கு நிறங்கள்: வெள்ளை எண்கள்: 2, 6 பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள்  அகலும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் காரிய வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக வாங்கத் திட்டமிட்டிருந்த வாகனம், சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தெய்வ பக்தி  அதிகரிக்கும். 

தொழில், வியாபாரம் மந்தமாகக் காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல், வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவேண்டும். 

குடும்பத்திலிருப்பவர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் அனுசரித்துப் போவது நன்மைதரும்.பண விவகாரங்களில் கவனம் தேவை. பெண்கள் வீண் பேச்சைக் குறைக்க வேண்டும். 

கலைத் துறையினரின் கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். அரசியல்வாதிகளுக்கு எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்களுக்கு, அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன் திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு நிறங்கள்: வெள்ளை, சிவப்பு எண்கள்: 1, 3 பரிகாரம்: ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்கிவரக் காரியத் தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.

****************************************************************************************************************************************************

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தாமதம் நீங்கும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். மற்றவர்களுக்கு வலியச் சென்று உதவிகள் செய்ய வேண்டாம். இடமாற்றம் உண்டாகலாம். 

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் வராது.  அலுவலகத்தில் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்காக சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்குள் இடைவெளி நீங்கும்.  பிள்ளைகளின் அறிவுத் திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். 

பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கலைத் துறையினருக்குச் சோம்பல் குறைந்து உற்சாகம் ஏற்படும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.  

அரசியல்வாதிகளுக்கு பழைய பாக்கி வசூலாகும். மேன்மை உண்டாகும். தலைமைப் பதவியிலிருப்பவர்களின் பாராட்டு  கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன் திசைகள்: தெற்கு, தென்மேற்கு நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம் எண்கள்: 2, 5  பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் பெருமாளைத் தரிசித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close