[X] Close

இடம் பொருள் மனிதர் விலங்கு: ஒரு மேஜையின் கதை


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 17:59 pm
  • அ+ அ-

மேஷம்: கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் விரைந்து முடியும்.

ரிஷபம்: சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். முன்கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

மிதுனம்: பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கக் கூடும். அக்கம்பக்கத்தினர் சிலரின் செயல்பாடுகளால் எரிச்சல் அடைவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

கடகம்: குடும்பத்தினருடன் ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடன் பிரச்சினைக்குத் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பணவரவு உண்டு.

சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் திறமை பளிச்சிடும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். விருந்தினர் வருகை உண்டு.

கன்னி: மந்த நிலை, காரியத் தடைகள் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு.

துலாம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள்.

விருச்சிகம்: தன் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு.

தனுசு: நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்.

மகரம்: நீண்ட காலக் கனவு நனவாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

கும்பம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல் வரக்கூடும். புது வேலை கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மீனம்: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள்.

 

 

 

 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close