[X] Close

கற்பிதமல்ல பெருமிதம் 50: மீண்டு எழுவதே வாழ்க்கை


50

  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 17:24 pm
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 20  : இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

சனி பகவானுக்கான பரிகாரங்கள் என்ன என்பதை இன்னும் விரிவாகப் பார்ப்போமா?

அனுமனையும், விநாயகபெருமானையும் வணங்கினால் சனியின் பிடியிலிருந்து விலக்கு பெறலாம் என்றெல்லாம் பார்த்தோம்.

அது குறித்த விளக்கத்தையும் பார்த்துவிடுவோம்.

இதுவரை நாம் கேட்ட கதைகள்.....

விநாயகர் “ இன்று போய் நாளை வா” என்றும், அனுமன் தன் வாலால் சனியை கட்டி இறுக்கினார் என்பதான புராணக்கதைகளை நாம் கேட்டிருப்போம்.

ஆனானப்பட்ட ஈசனையே... அந்த சிவபெருமானையே ... ஒரு நாழிகை ஒளிந்து அதாவது மறைந்திருக்கும்படியாக செய்த சனிபகவான், இந்த இருவரையும் விட்டு வைப்பாரா என்ன?  

உண்மை என்ன?

விநாயகர் உருவம் ... மனித உருவிலிருந்து விலங்கு உருவம் ( யானை) பெற்றவர். அனுமன் ... இந்திரனின் வஜ்ராயுதத்தால் பாதிக்கப்பட்டவர். அதாவது விபத்தால் அல்லது விபரீதத்தால் பாதிக்கப்பட்டவர்.

ஆக, தன் உடல் ரீதியாக ஊனம் அடைந்தவர்களுக்கு, இப்படி உடல் ரீதியாக மாற்றுதிறனாளியாக இருப்பவர்களுக்கு சனி எந்த பாதிப்பையும் தர மாட்டார்.  

ஏன்? என்ன காரணம்? அவரே ஒரு மாற்றுத்திறனாளிதான்! 

ஆமாம்... அவரால் நேராக நிற்க முடியாது. அவருடைய கால்கள் இரண்டும் வளைந்த அமைப்பில் இருக்கும்.

 எனவே இப்படி உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட அனுமனையும்,  விநாயகரையும் வழிபட சனியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடலாம், இதுதான் உண்மை நிலவரம் என்றும் சொல்கின்றன புராணங்களும் ஜோதிட சாஸ்திரங்களும்!

சரி , இது தொடர்பாக வேறு என்ன பரிகாரம் செய்யலாம்? ஊனமுற்றோருக்கு எந்த வகையிலாவது உதவுங்கள்! மூன்று சக்கரவாகனம் தருவது, பார்வையற்றவர்களுக்கு உதவி செய்வது, குறைந்தபட்சம் கைத்தடி வழங்குவது, சனி முதிய தோற்றம் உள்ளவர் எனவே, முதியவர்களுக்கு உதவி செய்வது,  இறந்தவரகளின் உடலைச் சுமப்பது ,  எளியோருக்கு உணவு வழங்குவது, அதாவது அன்னதானம் செய்வது என்று செய்யுங்கள்.  

கண் கோளாறு உள்ளவர்களுக்கு சிகிச்சைக்கு உதவி செய்யுங்கள்.

விதவைகளுக்கு மறுவாழ்வு தரலாம். அப்படி மறுவாழ்வு தருபவர்களுக்கு பக்கபலமாக இருந்து ஏதேனும் உதவலாம்.   

கைவிடப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம். அல்லது அவர்களின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளலாம்.  

பிரிந்த குடும்பத்தை ஒன்றிணைக்கப் பாடுபடலாம். பங்காளிச் சண்டையை முடித்து வைக்க உழைக்கலாம். இவையெல்லாம்  சனி பகவானின் அருளாசியை பெற்றுத்தரும்.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர், தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனி பகவான் , திருநரையூர் குடும்ப சமேத சனிபகவான் முதலானோரை தரிசித்து வாருங்கள், நன்மைகள் பெருகும்.  

’திருநள்ளாறு சென்று, நள தீர்த்தத்தில் நீராடிவிட்டு, அப்படியே ஆடைகளை விட்டுவிட்டு, சனீஸ்வரரை தரிசித்துவிட்டு வருவோம்’ என்று நினைக்கிறீர்கள்தானே.

இங்கே ஒருவிஷயம்... ஆடையை ஆற்றில் விடுவது நல்லதல்ல. அங்கே விட்டுவிடவேண்டும். அவ்வளவுதான். மேலும் உள்ளத்தின் அழுக்கை கைவிட்டால்தான், சனீஸ்வரர் அருள்வதற்கு ஆனந்தமாக வருவார்!

அப்படி கைவிடுவதாக இருந்தால்.... உங்கள் ஆபரணங்களையும் கைவிடுங்கள். ஏனென்றால், சனி பகவான் எளிமையின் அம்சம். ஆடம்பரத்தை ஒருபோதும் விரும்பமாட்டார். ஆகவே, உங்கள் ஆபரணங்களையும் நள தீர்த்தத்தில் விட்டுவிடுங்கள்.

அய்யோ... அனைத்து ஆபரணங்களையும் எப்படி விடுவது? என்று கேள்வி எழுகிறது அல்லவா. ஒரு வேட்டியையும், சட்டையையும் விடுவதால், அப்பாடா ... நம்மைப் பிடித்த சனி விட்டுச்சு என நினைத்தால்... நீங்கள் பெரிய அப்பாவி என்று அர்த்தம்!  

புறத்தேவைகளை விட்டொழித்தால்தான் சனி பகவானின் அன்பும் அருளும் ஆசியும் நமக்குக் கிடைக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

சனி பகாவனின் வழிபாடுகள், பரிகாரங்கள்  இன்னும் இருக்கின்றன. அடுத்த பதிவில் பார்ப்போம்!

- தெளிவோம்

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close